கச்சா எண்ணெய் விலை 4சதவீதம் சரிவு

புதுடில்லி:சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையேயான சமரச பேச்சுவார்த்தை குறித்த நம்பிக்கையால், இந்திய முன்பேர வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை நேற்று கிட்டத்தட்ட 4 சதவீதத்துக்கும் மேல் சரிந்தது.

இந்திய எம்.சி.எக்ஸ்., எனப்படும் மல்டி கமாடிட்டி சந்தையில், ஏப்., மாத வினியோக ஒப்பந்தத்துக்கான கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 4.50 சதவீதம், அதாவது, 396 ரூபாய் குறைந்து 8,340 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதேபோல் மே மாத வினியோக ஒப்பந்த விலையும் கிட்டத்தட்ட 3.58 சதவீதம் சரிந்து 8,209 ரூபாயாக காணப்பட்டது.

மேற்காசிய போர் சூழலில் நிலவிய பதற்றம் சற்று தணிந்ததே, இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

Advertisement