குழந்தை பிறந்து 23 நாளில் தாய் பலி

கெங்கவல்லி: பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே, தழுதாழையை சேர்ந்த கட்டட தொழிலாளி ரமேஷ். இவரது மனைவி அருணா-தேவி, 23. இவர்களுக்கு, 2025 ஜூன், 26ல் திருமணமானது. கர்ப்-பிணியாக இருந்த அருணாதேவி, கெங்கவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த, 2ல் அருணாதேவிக்கு, அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல், அரு-ணாதேவிக்கு, 'அலர்ஜி' ஏற்பட்டு வந்ததாக, மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று மாத்திரை தீர்ந்த நிலையில், அருணாதேவி, கண-வருடன், அதே மருத்துவமனைக்கு வந்தார்.அருணாதேவிக்கு மருத்துவர் அறிவுறுத்தினார். பின் அதற்கான பணி மேற்கொண்டபோது, அவர் உயிரிழந்தார். குழந்தை பிறந்து, 23 நாளில், தாய் பலியானார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement