நாட்டு மாடுகள் கிடையமர்த்தம்

சோழவந்தான்: நகரி அருகே நாட்டு மாடுகள் கிடை அமர்த்தப்பட்டுள்ளன.

இங்கு முதல் போக அறுவடை முடிந்து கோடை உழவுக்காக விவசாயிகள் நிலங்களை தயார் செய்து வருகின்றனர். இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் கிடை அமர்த்தப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு கிடையமர்த்த மாடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ரூ. 1500 முதல் 5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

மாடுகளின் சாணம், சிறுநீர் வயலுக்கு இயற்கையான அடியுரமாக கிடைப்பதால் விவசாயிகள் இதனை விரும்புகின்றனர். மாடுகளுக்கும் பசுந்தீவனம் கிடைப்பதால் ஆரோக்கியமாக வளர்கின்றன.

Advertisement