அ.தி.மு.க., பழனிசாமிக்கு மூன்று கேள்விகள்: சிதம்பரம்

தேவகோட்டை:தேர்தல் பிரசாரம் செய்ய வரும் போது அ.தி.மு.க. பழனிசாமியிடம் மூன்று கேள்விகள் கேட்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

-

தேவகோட்டை கிழக்கு, வட்டார பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் வட்டாரத் தலைவர் புகழேந்தி தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தல் ஆலோசனை வழங்கினார்.

அவர் பேசுகையில்,அ.தி.மு.க. கட்சியை டில்லி பா.ஜ., இயக்குகிறது.ஆளும் கட்சியை எதிர்த்து நாம் எதிர்க்கட்சியாக இருந்தால் அழுத்தமாக கேட்போம். அவர்களும் அழுத்தமாக பதில் கூறுவார்கள். ஆனால் 100 நாள் வேலை திட்டத்தை பெயரை மாற்றியதற்கு எல்லா எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தோம். பழனிசாமி அழுத்தமாக கேள்வி கேட்காமல் மென்மையாக நடந்து கொண்டார். இந்த தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. வெற்றி பெற்றால் பா.ஜ.வை சேர்ந்த இருவரை துணை முதல்வர்களாக நியமித்து விடுவார்கள் . பீகாரை போல் மூன்று மாதத்தில் முதல்வரை ராஜ்யசபா எம்.பி. யாக்கி விடுவார்கள். நான் முன்பே இப்படி நடக்கும் என சொன்னது போலவே நடந்தது.

தேர்தல் பிரசாரம் செய்ய வரும் போது அ.தி. மு.க. பழனிசாமியிடம் மூன்று கேள்விகள் கேட்க உள்ளேன். அவர் பதில் கூறட்டும் என்றார்.

Advertisement