பள்ளி ஆண்டு விழா

தேவகோட்டை:தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் கற்களத்துார் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா ஆசிரியர் வடிவேல் தலைமையில் நடந்தது. ஆசிரியை எமல்டா தேவி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் ஜான் மில்டன் பிராங்கிளின் அறிக்கை வாசித்தார். வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர் ராஜசேகரன், முன்னிலை வகித்தார்.

தமிழாசிரியர் ராமராஜன், தலைமையாசிரியர்கள் தனிஷ்லாஸ், ஜோசப், சாந்தி சாத்தையா, செந்தில்குமார், செல்வம், டயஸ்ராணி, ஆனந்தி, ஜான் பீட்டர், ராஜா, மற்றும் ஆசிரியர்கள் ஆரோக்கியம், ஜெபமாலை, ஜெசிந்தா மேரி, திரவியம், சசி, உட்பட திருவாடானை ஒன்றிய ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement