தொகுதி பங்கீட்டில் நடந்த உள்ளடி: பா.ஜ.,வுக்குள் வெடித்தது பூகம்பம்
- நமது நிருபர் -
அ.தி.மு.க., கூட்டணி தொகுதி பங்கீட்டில் முந்திக்கொண்டாலும், தொகுதி ஒதுக்கீட்டில் இன்னும் முட்டல் மோதல்கள் உள்ளன. நேற்று வரை கூட, பா.ஜ.,வால் வேட்பாளர்களை அறிவிக்க முடியவில்லை. காரணம், ஒதுக்கப்பட்ட தொகுதிகளால் பா.ஜ., மேலிடம் கடும் அதிருப்தியில் உள்ளது. அதனால் தான் பா.ஜ.,வின் அமைப்புச்செயலர் சந்தோஷ், சில நாட்களுக்கு முன் சென்னை வந்தார்.
மேலிடத்தினர் மட்டும் அல்லாமல், தமிழக பா.ஜ.,வினர் மத்தியிலும் கடும் அதிருப்தி இருக்கிறது. அதிருப்தியின் வெளிப்பாடாக, பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், 'எட்டப்பர்களை வெளியே நிறுத்தும் தலைவர்கள் வேண்டும்' என, தன் கட்சியின் மாநில தலைவர்களை பற்றி நேற்று அறிக்கை வெளியிட்டார். இதைப் போல், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் அதிருப்தி குரல்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன.
கொங்கு, சென்னை பா.ஜ.,வுக்கு கொங்கு மண்டலத்தில் கணிசமான ஓட்டு இருக்கிறது; குறிப்பாக கோவையில். அங்கு எப்படியும் இரண்டு தொகுதி வரும் என்ற நம்பிக்கை பா.ஜ.,வினரிடம் இருந்தது. அதில் ஒன்று, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஒதுக்கப்படும் என, எதிர்பார்ப்பில் இருந்தனர்.
சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பேசிய பழனிசாமி, 'கோவையில் பா.ஜ.,வுக்கு இரண்டு தொகுதிகள் கொடுக்க வேண்டியிருக்கும்' என்றார். அது பா.ஜ.,வினரை மேலும் உற்சாகமாக்கியது. ஆனால், கடைசியில், கோவை வடக்கு தொகுதி மட்டுமே பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டது.
அதே போல், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியில், வசந்தராஜன் என்பவர் தேர்தல் பணியாற்றி வந்தார். அவரது ஆதரவாளர்கள், தொகுதி கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையிலும் பா.ஜ.,வுக்கு கணிசமான ஓட்டு இருக்கிறது. சென்னையில், தி.நகர், வேளச்சேரி, மயிலாப்பூர் தொகுதிகளில் ஏதேனும் இரண்டு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்காக, கட்சியின் இளம் தலைமுறையினர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக உழைத்து வந்தனர்.
கோவையில் இரண்டு கிடைக்காவிட்டாலும், சென்னையில் கிடைக்கும் தொகுதி ஒன்றில் அண்ணாமலை போட்டியிடுவார் என்ற பேச்சும் இருந்தது. ஆனால், இங்கும் ஒரு தொகுதியை தான் வாங்கி வந்தனர். லோக்சபா தேர்தலில், இருமுறை வென்ற, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில், ஒரு தொகுதியாவது பெற வேண்டும் என, கட்சியில் பலரும் வலியுறுத்தியும், வாங்கவில்லை.
திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தை முன்வைத்து, ஹிந்து அமைப்புகள் பெரிய அளவில் போராட்டம் நடத்தின. பிரதமர் மோடியே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வழிபட்டார். ஆனால், அந்த தொகுதியையும் வாங்கவில்லை என்பது பேரதிர்ச்சியாக அமைந்தது.
மாறாக, இன்று வரை தி.மு.க., கோட்டையாக உள்ள திருச்செந்துாரை வாங்கிவிட்டு, சந்தோஷ் விளக்கம் கேட்டபோது, 'அது கோவில் நகரம். கட்சி வளர வாய்ப்பு இருக்கும் என்பதால் வாங்கினோம்' என விளக்கம் அளித்தனர்.
கட்சி பெரிய அளவில் இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்தில், மூன்று தொகுதிகளை பெற்றது, பா.ஜ., முக்கிய தலைவர்களையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படி வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை விட்டுவிட்டு, வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகளையே பெரும்பான்மையாக வாங்கி உள்ளனர். 27 தொகுதிகளில், 2021 தேர்தல் முடிவுகள்படி, நான்கு தொகுதிகளில் தான் வாய்ப்புள்ளது; 2024 தேர்தல் முடிவுகள் படி, 10 தொகுதிகளில் தான் வெற்றி வாய்ப்பு உள்ளது (பட்டியலை பார்க்க).
தொகுதி மாற்ற முயற்சி இது குறித்து பா.ஜ., நிர்வாகிகளிடம் பேசியபோது:
மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தான் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் பேசி, தொகுதிகளை முடிவு செய்தனர். மாநில அமைப்பு செயலர் இல்லாததால், அவர்களின் கைகளே ஓங்கியிருந்தது. பழனிசாமியும் முருகனும் மிகவும் நெருக்கம். பழனிசாமி சொல்வதை முருகன் மறுக்க மாட்டார்.
நயினார் நாகேந்திரன் சொல்பவற்றை பழனிசாமி கேட்டுக்கொள்வதே இல்லை. 'நான் மேலிடத்தில் பேசிக்கொள்கிறேன்' என்று தட்டிக்கழித்து விடுவார். இவர்கள் கட்சிக்காக தொகுதிகளை பெறாமல், சிலரின் சுயநலத்திற்காக தொகுதிகளை பெற்று இருக்கினறனர். வேண்டாதவர்களை வீழ்த்த நடந்த சதிகள் தான் அதிகம்.
இதனால் தான், பி.எல்.சந்தோஷ் வநத்போது கடும் கோபத்தில் பலரை ஒருமையில் திட்டினார். கட்சி மேலிடத்திற்கு மாநில தலைவர்கள் செய்தது துளியும் பிடிக்கவில்லை. இப்போது சரி செய்ய முயற்சிக்கிறார்கள்.
கொங்கிலும், சென்னையிலும் கூடுதல் தொகுதிகளுக்கு முயற்சித்து வருகிறார்கள். ஆனால், பழனிசாமி விட்டுக்கொடுப்பாரா என்று தெரியவில்லை.
இவ்வாறு பா.ஜ.,வினர் குமுறுகின்றனர்.
இது தவிர, தேர்தலில் மீண்டும் மீண்டும் தோற்றாலும், போட்டியிட்டவர்களுக்கே வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்ற பிரச்னையும் நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (33)
Arul Narayanan - Hyderabad,இந்தியா
29 மார்,2026 - 14:33 Report Abuse
அதிமுக ரிஸ்க் எடுக்கும் ஒரு தொகுதியை உதாரணம் காட்டி சப்பைக்கட்டு கட்டவேண்டாம். 2024 மக்களவைத் தேர்தலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக அதிக ஒட்டு வாங்கி இருந்தது. அந்த எண்ணிக்கைக்கு 26 என்பது மிகவும் குறைவு. அவற்றை விட்டு விட்டு ஆகாத போகாத தொகுதிகளை ஒதுக்குவது என்ன நியாயம்? 0
0
Reply
saravanan - chennai,இந்தியா
29 மார்,2026 - 14:30 Report Abuse
தொகுதி பங்கீட்டிலும் சரி ஒதுக்கீட்டிலும் சரி பாஜக தலைவர்கள் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றே எண்ண தோன்றுகிறது ஜெயிக்க வாய்புள்ள தொகுதி எனும்போது பாதி வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விடுகிறது. அப்படிப்பட்ட எளிதான தொகுதிகளை கண்டறிந்து உரிமையோடு போராடி கேட்டு வாங்கியிருக்க வேண்டாமா? பாஜக தமிழகத்தில் வளரும் கட்சியாக இருந்தாலும் சில பகுதிகளில் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. உதாரணத்திற்கு கொங்கு மண்டலம், நாஞ்சில் பகுதிகளிலும், வடக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர், தளி ஆகிய இடங்களில் மக்கள் செல்வாக்கு அதிகமுள்ள இயக்கமாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடின இலக்கை நோக்கிய பயணம் போகும் வேளையில் பூகம்பங்கள் தற்போது வெடிப்பதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை 0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
29 மார்,2026 - 13:23 Report Abuse
உண்மையாக உழைத்து மக்களுக்காக பாடுபட்டவனை ஒதுக்கிய கட்சி தலைமை, உழைக்காமல் கட்சியை அதிமுகவிடம் சுயநலமாக அடகு வைத்த ஆரிய அயோக்கியர்கள் இருக்கும் வரை உருப்படாது. பாஜாக உண்மையான தொண்டர்களே, அண்ணமலை ஆதரவாளர்களே, உங்க வாக்குகளை சீமானுக்கோ, விஜய் போடுங்கள், அதிமுக பாஜக அயோக்கியர்களுக்கு வேண்டாம் 0
0
Reply
Arul Narayanan - Hyderabad,இந்தியா
29 மார்,2026 - 12:52 Report Abuse
எல் முருகன் பதவியை உருவிக் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
29 மார்,2026 - 12:16 Report Abuse
அண்ணாமலையை மொத்த பாஜகவினர் மறந்தது மிக பெரிய துரோகம்? 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
29 மார்,2026 - 12:14 Report Abuse
ஆகாத தொகுதிகளை ஒதுக்கி பாஜகவை இபிஎஸ் ஓரங்கட்டி துரோகம் செய்து விட்டார்! பாஜகவினரை ஏமாளி ஆக்கி விட்டார்! 0
0
Reply
Abdul Rahim - Karaikudi,இந்தியா
29 மார்,2026 - 11:58 Report Abuse
மீண்டும் சொல்கிறேன், எதிரணியில் இருந்தாலும் யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது, அண்ணாமலை இருக்க வேண்டிய இடம் இதுவல்ல..... 0
0
Reply
Haja Kuthubdeen - ,
29 மார்,2026 - 11:04 Report Abuse
234 தொகுதிகளுமே ரொம்ப முக்கியமானதுதான்.இந்த தடவை பிஜெபிக்கு ஒதுக்கிய தொகுதிகளில் கடினமானது திருவாரூர்..தஞ்சை போன்ற சில தொகுதிகளே...இதை பிஜெபியினர் உணரனும்.திமுகவின் வலிமையான சென்னை தொகுதிகள் பல அஇஅதிமுகவிற்கு சோதனையான தோல்வி அடையக்கூடியவை.உதாரணம் எலும்பூர்..சேப்பாக்கம்..துறைமுகம்..கொளத்தூர் இன்னும் சில ரொம்ப கடினமானது.இதை பிஜெபியினர் உணர்வார்கள்.அப்படி இருக்க வீணாக தலைவர்களை குறை சொல்ல கூடாது.திருத்துறை பூண்டி 100%கடினம்.அங்கே அஇஅதிமுகதானே களம் காணுது... 0
0
Reply
S. Venugopal - Chennai,இந்தியா
29 மார்,2026 - 09:21 Report Abuse
பெரும்பலான தமிழக மக்கள் தேர்தலை கிரிகட், கபடி போன்று ஒருவித விளையாட்டாகவே பார்க்கிறார்கள். போட்டியிடுபவர்கள் அரசியலை ஒரு தொழிலகக் கருத்துகிறார்கள். ஆகவே வெற்றி தோல்வியினை நிர்னயிப்பது பணம் தான் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் சில நேரங்களில் வாக்காளர்கள் மத்தியில் கட்சியின் தலைவர் டீம் கேப்டன் முக்கியத்துவம் பெறுகிறார். ஆனால் இந்த நிலை மற்ற பல மாநிலங்களில் இல்லை அங்கு கட்சியும் ஆட்சியில் மாற்றமும் தான் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் அரசியலில் தமிழகத்தில் ஏற்பட்ட முக்கியமான குழப்பமான கடந்த காலகட்டங்களில் மத்தியில் உள்ள சில மிகப்பபெரிய தலைவர்களின் நேரடித் தலைமையின் கிழ் எதிர்பாராத அபரிதமான வெற்றியினை சில காட்சிகள் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பெரிய மாற்றத்தினை தமிழகத்தில் எதிர்பார்க்கும் அகில இந்திய கட்சிகள் அகில இந்திய தலைவரையே மாநிலத் தலைவராக வைத்து அவரின் நேரடித் தலைமையில் செயல் பட்டால் மாற்றத்தினை கொண்டுவரலாம். இது பெரிய ரிஸ்க் கான வேலை தான். சாணக்கியனின் சொல்லான சிங்கத்தின் தலைமையின் கிழ் போருக்குப் போகும்.. வெற்றிபெறும் ஆனால்.....தலைமையின் கிழ் போருக்குப் போகும் சிங்கம் தோல்வியினை சந்திக்கும் என்பதினை நினைவு கொள்ளவேண்டும் 0
0
vivek - Benaras,இந்தியா
29 மார்,2026 - 09:52Report Abuse
பாவம் அந்த ….. 0
0
Reply
kulanthai kannan - ,
29 மார்,2026 - 09:14 Report Abuse
அண்ணாமலை மொடகுறிச்சியில் போட்டியிட வேண்டும். 0
0
Reply
மேலும் 22 கருத்துக்கள்...
மேலும்
-
புவிசார் காகித கூழ் பொம்மைகள் மூலம் 100 சதவீத ஓட்டு பதிவு விழிப்புணர்வு
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
Advertisement
Advertisement