முக்கிய 7 விவசாய பொருட்களுக்கு முன்பேர வர்த்தக தடை நீட்டிப்பு உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சந்தையில் ஏற்படும் தேவையற்ற விலை ஏற்றத்தை தவிர்க்கவும், முக்கிய ஏழு விவசாய பொருட்களின் முன்பேர வர்த்தகத்துக்கான தடையை, வரும் 2027ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பதாக, செபி அறிவித்துள்ளது.

சந்தையில் அதிகப்படியான ஊக வணிகத்தை குறைத்து, உணவு பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செபி கூறியுள்ளது.

ஏற்கனவே, இந்த முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அதை முடித்துக்கொள்ளலாம் என்றும்; இந்த பொருட்களில் புதிதாக முன்பேர வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த உத்தரவு முதன்முதலில் கடந்த 2021, டிசம்பர் 19 அன்று பிறப்பிக்கப்பட்டது.

அப்போது, 2022, டிசம்பர் 20 வரை வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதன் பின், இந்த தடை பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement