தேனி, திண்டுக்கல்லில் பா.ஜ.,போட்டியில்லை: தொண்டர்கள் சோர்வு

கம்பம்:தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பா.ஜ., ஒரு தொகுதியில் கூட போட்டியிடாதததால் அக் கட்சி தொண்டர்கள் சோர்வடைதந்துள்ளனர்.

மாநிலத்தில் அ.தி.மு.க., தி.மு.கவிற்கு அடுத்து பா.ஜ., வலுவான உட்கட்டமைப்பை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் வார்டு நிர்வாகிகள் , சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளனர். பூத் கமிட்டியினருக்கு பயிற்சி பல கட்டங்களாக வழங்கப்பட்டது.

இத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியிட கட்சி தலைமையை வலியுறுத்தினர். இந்நிலையில் அ.தி.மு.க., கூட்டணியில் தேனி,திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட பா.ஜ.,விற்கு ஒதுக்கவில்லை.

மதுரை தெற்கு, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை என அருகில் உள்ள மாவட்டங்களில் பா.ஜ., போட்டியிடுகிறது. தேனி, மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட போட்டியிடாதது, பா.ஜ. தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் கூட்டணி முடிவை ஏற்று கூட்டணி வெற்றியே எங்களுக்கு முக்கியம் என்று கருதி அ.தி.மு.க. அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக பாடுபடுவோம் என்கின்றனர் பா.ஜ. நிர்வாகிகள்.

Advertisement