திருத்தணி சக்தி பப்ளிக் பள்ளி ஆண்டு விழா

திருத்தணி:திருத்தணி சக்தி பப்ளிக் பள்ளியின் 14ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.

திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு பகுதியில் சக்தி பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியின் 14ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் லோகமணி பங்கேற்று, பள்ளி அளவில் நடந்த தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவ - மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். அதேபோல்,

விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, மாணவ- மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் ஸ்ரீமோகன் தாமணி, பள்ளி முதல்வர் யடல நாகலட்சுமி, துணை முதல்வர் ஸ்ரீமதி சிந்துாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

★★

Advertisement