ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைக்க மப்பேடு விவசாயிகள் கோரிக்கை

கடம்பத்துார்: மப்பேடு பகுதியில் ஏரி நீர்வரத்து கால்வாய் செடிகள் வளர்ந்து புதர் சூழ்ந்துள்ளதை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் அமைந்துள்ளது பெரிய ஏரி. நீர்வளத்துறைக்குச் சொந்தமான இந்த ஏரியிலிருந்து வெளியேறும் நீர் அழிஞ்சிவாக்கம் ஒட்டேரிக்கு செல்லும் வகையில் வடிகால்வாய் உள்ளது.

இதில், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையோரம் உள்ள நீர் வெளியேறும் வடிகால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால், முட்செடிகள் வளர்ந்து, புதர் சூழ்ந்துள்ளது. இதனால் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் விளை நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர். வரத்துக் கால்வாயை சீரமைக்க கோரி, பலமுறை நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட நீர்வளத்துறையினர், வடிகால்வாயை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Advertisement