புதுச்சேரியில் வரும் 4, 5 தேதிகளில் 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி: மாணவர்களே., சரியான பாதையை தேர்வு செய்ய வாங்க....
புதுச்சேரி: மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிர செய்யும் 'தினமலர் வழிகாட்டி' மெகா கல்வி திருவிழா, வரும் ஏப்ரல் 4 மற்றும் 5 தேதிகளில் புதுச்சேரியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 'அடுத்து என்ன படிக்கலாம்? எந்தத் துறை சிறந்த எதிர்காலத்தை தரும்?' என்ற குழப்பங்களுக்கு முழுமையான தீர்வை வழங்கும் வகையில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சி, புதுச்சேரி 100 அடி சாலை, மரப்பாலம் சிக்னல் அருகிலுள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டர் ஏசி அரங்குகளில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும். முன்னணி கல்வி நிறுவனங்களின் 80-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இதில் இடம் பெறுகின்றன.
முழு வழிகாட்டல்
இந்த நிகழ்ச்சியில், அப்ளிகேஷன் செய்வது முதல் அட்மிஷன் பெறுவது வரை தேவையான அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும். கல்வி ஆலோசகர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் வல்லுநர்கள் நேரடியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.
எதிர்காலத்தை ஆளும் துறைகள்
சிவில் சர்வீசஸ், மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், கலை & அறிவியல், டிசைன், ஆர்க்கிடெக்சர் போன்ற பாரம்பரிய துறைகளுடன், செயற்கை நுண்ணறிவு, மிஷின் லேர்னிங், டீப் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ், மெட்டாவர்ஸ், போன்ற நவீன துறைகள் குறித்தும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
நுழைவுத் தேர்வுகள் - முழு விளக்கம்
நீட், ஜே.இ.இ., போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் பற்றிய முழுமையான வழிகாட்டல் வழங்கப்படும். மேலும், சென்டாக் மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் பற்றியும் தெளிவாக விளக்கப்படும்.
உயர்கல்வி - உதவித்தொகை வாய்ப்புகள்
ஐ.ஐடி., என்.ஐ.டி., எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான வழிமுறைகள், மாணவர்கள் பெறக்கூடிய உதவித்தொகைகள், வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் ஆகிய அனைத்தும் விரிவாக எடுத்துரைக்கப்படும்.
உற்சாகம் தரும் பரிசுகள்
கருத்தரங்கங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இலவச பங்கேற்பு
பிளஸ் 2 மாணவர்கள், பெற்றோர் அனைவரும் இலவசமாக பங்கேற்று பயன் பெறலாம். கல்வி, தொழில், எதிர்காலம் - மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் இந்த 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி, மாணவர்கள் தவறவிடக் கூடாத அரிய வாய்ப்பு...மறக்காம முன்பதிவு செய்துவிட்டு வந்துடுங்க...
பாக்ஸ்.,
இணைந்து வழங்குவோர்
நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட்ஆப் டெக்னாலஜி, ருசி பால் நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.
இலவச முன்பதிவிற்கு
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் தினமும் காலை மற்றும் மாலையில்கருத்தரங்கம் நடக்கிறது. இதில் பங்கேற்க கியூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்துஅல்லது 9566777833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் RGN என்று டைப் செய்து பதிவுசெய்யலாம்.
ஸ்டால் புக்கிங்....
தினமலர் வழிகாட்டி ஸ்டால்புக்கிங்கிற்கு 98940-09059, 99449-63834 என்ற மொபைல் எண்களை தொடர்புகொள்ளவும்.
மேலும்
-
தேசிய பங்கு சந்தையிலும் கச்சா எண்ணெய் வர்த்தகம் ஏப்., 13 முதல் அறிமுகம்
-
முக்கிய 7 விவசாய பொருட்களுக்கு முன்பேர வர்த்தக தடை நீட்டிப்பு உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
-
நிறுவன அறிவிப்புகள்
-
தொகுதி பங்கீட்டில் நடந்த உள்ளடி: பா.ஜ.,வுக்குள் வெடித்தது பூகம்பம்
-
நீண்டகால வளர்ச்சிக்கு தயாராகும் 'பெல்'
-
'பி.எம்., இ டிரைவ்' திட்டத்தில் மாற்றம் வாகன பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு