கடலுாரில் முதன் முறையாக அ.தி.மு.க., காங்.,நேரடி மோதல்

கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதியில் முதன்முறையாக அ.தி.மு.க.,வை எதிர்த்து காங்., நேரடியாக மோத உள்ளதால் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடலுார் சட்டசபை தொகுதியில் கடந்த, 1951ம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டசபை தேர்தல் முதல் தமிழக சட்டசபை தேர்தல் 2021 வரை 16 முறை தேர்தல் நடந்துள்ளது.

அதில் தி.மு.க., 8 முறையும், காங்,. 4 முறையும், அ.தி.மு.க., 3 முறையும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன.

இம்முறை தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க.,வும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரசும் நேரடியாக மோதுகின்றன.

அ.தி.மு.க.,வும், காங்கிரசும் முதன்முறையாக நேரடியாக மோதுவதால் வெற்றி யாருக்கு என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடலுார் தொகுதியில் கடந்த, 1962 தேர்தல் முதல் 2021 தேர்தல் வரை தி.மு.க., 14 முறையும் நேரடியாக போட்டியிட்டுள்ளது. கூட்டணிக்கு ஒதுக்கியதே இல்லை. ஆனால் இம்முறை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியுள்ளது.

அ.தி.மு.க., முதன்முறையாக போட்டியிட்ட, 1977 தேர்தல் மற்றும் 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றது.

கடந்த முறை தி.மு.க.,விடம் 5ஆயிரத்து 151 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது. எனவே இம்முறை முதன்முறையாக அ.தி.மு.க.,வுடன் காங்.,மோதுவதால் வெற்றிபெறுவது யார் என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement