பண்ருட்டியில் வி.சி.க., போட்டி: தி.மு.க., நிர்வாகிகள் 'அப்செட்'
பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி தி.மு.க.விற்கு ஒதுக்காததால் அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பண்ருட்டி சட்டசபை தொகுதி, மறுசீரமைப்பிற்கு பின், நெல்லிக்குப்பம் தொகுதி நீக்கப்பட்டு, மாறுதலுக்கு பின் கடந்த, 2011ல் நடந்த தேர்தலில் நெய்வேலி தொகுதியை சேர்ந்த சபா ராஜேந்திரன் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பின் கடந்த, 2016ல், தி.மு.க., கூட்டணி சார்பில், சென்னையை சேர்ந்த தமிழக கட்டட தொழிலாளர்கள் சங்க தலைவர் பொன்குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சத்யாபன்னீர்செல்வம் வெற்றி பெற்றார்.
கடந்த, 2021 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்த த.வா.க., தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட நெய்வேலி தொகுதியை சேர்ந்த சொரத்துார் ராஜேந்திரன் தோல்வியடைந்தார்.
கடந்த 2011 முதல் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் வெளியூரை சேர்ந்தவர்களுக்கும், கூட்டணி கட்சியினரும்,
பண்ருட்டி தொகுதியில் போட்டியிட தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வேல்முருகன் எம்.எல்.ஏ., வெற்றி பெற்று இரு ஆண்டுகள் ஆன நிலையிலேயே, பண்ருட்டி தொகுதியில், தி.மு.க., உள்ளூர் நிர்வாகிகளுக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த ஒரு மாதமாக பண்ருட்டி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் ஆனந்தி சரவணன், டாக்டர் சரவணசங்கர் உள்ளிட்டோர் சென்னையில் முகாமிட்டிருந்தனர்.
பண்ருட்டி தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த மண்ணின் மைந்தருக்கே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று தி.மு.க., கூட்டணியில் பண்ருட்டி தொகுதி வி.சி.க.விற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் பண்ருட்டி தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் 'அப்செட்' ஆகி உள்ளனர்.
மேலும்
-
தேசிய பங்கு சந்தையிலும் கச்சா எண்ணெய் வர்த்தகம் ஏப்., 13 முதல் அறிமுகம்
-
முக்கிய 7 விவசாய பொருட்களுக்கு முன்பேர வர்த்தக தடை நீட்டிப்பு உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
-
நிறுவன அறிவிப்புகள்
-
தொகுதி பங்கீட்டில் நடந்த உள்ளடி: பா.ஜ.,வுக்குள் வெடித்தது பூகம்பம்
-
நீண்டகால வளர்ச்சிக்கு தயாராகும் 'பெல்'
-
'பி.எம்., இ டிரைவ்' திட்டத்தில் மாற்றம் வாகன பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு