புள்ளிமான் பலி

திருமங்கலம்: கள்ளிக்குடி சிவரக்கோட்டை பகுதியில் இருந்து சிங்கப்படை செல்லும் ரோட்டில் கணேசன் என்பவரது வீடும் வயலும் உள்ளது. வயலை சுற்றிலும் வேலி அமைத்துள்ளார். நேற்று காலை இரை தேடி ஒரு வயது ஆண் புள்ளிமான் வேலியை தாண்டி வயலுக்குள் வந்தது. வேலைக்கு ஆட்கள் வருவதை பார்த்து மிரண்டு ஓடியது.

தாண்ட முடியாமல் வேலியில் முட்டியதில் தலையில் அடிபட்டு இறந்தது. சாத்துார் வனச்சரக அலுவலர்கள் மீட்டு வனப்பகுதியில் புதைத்தனர்.

Advertisement