நுால்கள் அரங்கேற்றம்

மதுரை: மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் நடந்த தமிழ்க்கூடல், நுால் அரங்கேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார்.

பேராவூரணி அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் செந்தில்முருகன், 'தமிழ்ப் படித்தால் உலகம் உள்ளங்கையில்' என்ற தலைப்பில் பேசினார். வாழ்க்கையை ரசித்து வாழவேண்டுமென்றால் தமிழை நன்கு படிக்க வேண்டும் என்றார். பேராசிரியர் ஸ்ரீலட்சுமியின் 'அறிந்தும் அறியாததும்', பேராசிரியர் தனராஜின் 'தேடியுனைச் சரணடைந்தேன்' , பேராசிரியை அனார்கலி எழுதிய 'மீனாப்பாட்டியும் ஒரு சிங்கப்பெண் தான்', பேராசியர் வரதராஜன் எழுதிய 'மலரும் மொட்டுக்கள்' ஆகிய நுால்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

பேராசிரியைகள் மோகனா, வாசுகி, கவிஞர்கள் பாரதி, சந்தானகிருஷ்ணன் நுால் மதிப்புரை செய்தனர். ஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார்.

Advertisement