கார்  மோதி ஒருவர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் நாகரெத்தினம் 54. இவர் அரண்மனை பகுதியில் உள்ள காய்கறி கடையில் வேலை செய்தார். நேற்று மதியம் 2:45 மணிக்கு கடையில் இருந்து காய்கறியை சைக்கிளில் எடுத்துச் சென்றுள்ளார்.

நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் சைக்கிளில் மோதியது. காரின் சக்கரத்தில் சிக்கி நாகரெத்தினம் உயிரிழந்தார். காரை ஓட்டிய புதுமடம் தெற்கு தெருவை சேர்ந்த நசீர் அஹமதுவை 64, நகர் போலீசார் கைது செய்தனர்.

Advertisement