பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பாத்திர கடைகளில் பால் சொம்புகள் விற்பனை

கீழக்கரை: கீழக்கரை சுற்றுவட்டார கிராமங்களில் பங்குனி உத்திரம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேர்த்திக்கடன் பக்தர்கள் பால்குடம் எடுப்பதற்கான பால் சொம்பு மற்றும் பால் குடங்களை பாத்திரக்கடைகளில் அதிகளவு வாங்குவதற்காக வருகின்றனர். பாத்திர கடைக்காரர்கள் கூறியதாவது:

பங்குனி உத்திரம், வைகாசி விழா, தைப்பூசம் உள்ளிட்ட பெருவாரியான விசேஷ காலங்களிலும் பால்குடம் எடுப்பது வழக்கம். அவற்றிற்கான வெண்கலம் மற்றும் சில்வர் சொம்பு மற்றும் குடங்களை நேர்த்திக்கடன் பக்தர்கள் வாங்கி செல்கின்றனர்.

எவர்சில்வர் சொம்பு ரூ.150 முதல் ரூ.200 வரையிலும் வெண்கலத்தில் உள்ள சொம்பு ரூ.350 முதல் ரூ.500 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக விசேஷ காலங்களில் இதன் விற்பனை அதிகமாக இருப்பதால் மதுரை, சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் இருந்து மொத்தமாக பால்குட சொம்புகளை விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளோம் என்றனர்.

Advertisement