தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
கோவை: கோவை தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, நிர்மலா கல்லுாரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட 283 ஓட்டுச் சாவடிகளில், ஒவ்வொரு ஒட்டுச்சாவடிக்கும் ஒரு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் 1, 2, 3 என நான்கு வகையான அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தேர்தல் விதிமுறைகள், ஓட்டுப்பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல், ஓட்டுப்பதிவு குறித்து, மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.
ஓட்டுப்பதிவின்போது மின்னணு இயந்திரம் பழுதடைந்தால், தாமதமின்றி, மண்டல அலுவலருக்கு தெரியப்படுத்துதல், உடனடியாக மாற்று இயந்திரம் வைத்து ஓட்டுப்பதிவை தொடருதல், ஓட்டுப்பதிவை தாமதப்படுத்தாமல், குழப்பமின்றி துரிதமாக நடத்துதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அவசரகால தேவை கருதி ஒவ்வொரு பிரிவிலும் தலா 20 சதவீதம் கூடுதலாக 'ரிசர்வ்' பணியாளர்கள் என, மொத்தம் 1,400 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை தெற்கு தொகுதிக்கான தேர்தல் அலுவலர் குமரேசன், துணை தேர்தல் அலுவலர்கள் கணேசன், ராமராஜன் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளைக் கண்காணித்தனர்.
பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு, தபால் ஓட்டுக்கான படிவங்கள் வழங்கப்பட்டன.