இந்திய கம்யூ. வேட்பாளர் 3வது முறையாக போட்டி இந்த முறை வெல்வாரா?

திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதியில், தி.மு.க. கூட்டணி சார்பில், இந்திய கம்யூ. வேட்பாளர் ரவி, 3வது முறையாக களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2 முறை தோல்வியைத் தழுவிய இவர், இந்த முறையை வெற்றியை எதிர்நோக்கி களம் காண்கிறார்.

திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளராக தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூ. கட்சி சார்பில் ரவி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், 2016 தேர்தலில், மக்கள்நல கூட்டணி வேட்பளராக களமிறங்கினார். மீண்டும், 2021 தேர்தலில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டார். மூன்றாவது முறையாக, இத்தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.

இத்தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆனந்தன் போட்டியிடுகிறார். கடந்த, 2011 தேர்தலில், திருப்பூர் வடக்கில் வெற்றி பெற்று, அமைச்சராக பணியாற்றினார். 2019ல், திருப்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கடந்த, 2021 தேர்தலில், பல்லடம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை மீண்டும், திருப்பூர் வடக்கில் களமிறங்குகிறார்.

த.வெ.க. சார்பில், முன்னாள் எம்.பி. சத்தியபாமா, நா.த.க. சார்பில், அபிநயா போட்டியிடுகின்றனர். த.வெ.க. வேட்பாளர் வாக்காளருக்கு நன்கு பரீட்சயமானவர் என்பதால், அ.தி.மு.க. - தி.மு.க. - த.வெ.க. இடையே போட்டி கடுமையாக இருக்குமென தொகுதி வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.

--

ரவி

@block_B@ வேட்பாளர் பயோடேட்டா பெயர்: எம்.ரவி வயது : 69 மனைவி : எஸ்.கஸ்துாரி மகள் : டாக்டர் நிவேதிதா கல்வி : பத்தாம் வகுப்பு முகவரி : பி.எஸ். சுந்தரம் ரோடு, பாளையக்காடு. கட்சி பதவி: இ.கம்யூ., மாநில துணை செயலாளர் மக்கள் பணி: 1986 -1991 திருப்பூர் நகராட்சி கவுன்சிலர்.block_B

Advertisement