கோவில் உண்டியலை திருடியவர் கைது

சென்னை: மயிலாப்பூர் காரணீஸ்வரர் தெருவில், சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள உண்டியலை, மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சிகள், அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில், மயிலாப்பூர் போலீசார் விசாரித்து, மயிலாப்பூர், சைவ முத்தையா, 5வது தெருவைச் சேர்ந்த நாகராஜன், 40, என்பவரை நேற்று கைது செய்தனர்.

இவர், ஏற்கனவே, மயிலாப்பூர், ராமகிருஷ்ணாபுரத்தில், 10,000 ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை திருடிய வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement