ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் அலுவலர் ஆய்வு

திருப்போரூர்:திருப்போரூர் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் வரும் ஏப். 23ல் நடைபெறுகிறது. திருப்போரூர் தொகுதியில் மொத்தம், 369 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. திருப்போரூர் சட்ட சபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயகுமாரி புதுப்பாக்கம், சோணலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, ஓட்டுச்சாவடி மையத்தில் உள்ள அடிப்படை வசதிகளான மின்சார வசதி, மின் விளக்கு, கழிவறை வசதி, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் வந்து செல்ல சாய்தள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement