ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் இலவச சிகிச்சை முகாம் 

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில், பொதுமக்களுக்கான இலவச பிசியோதெரபி சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.

முகாமில் பிசியோதெரபி நிபுணர் ராஜா கலந்து கொண்டு நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த முகாமில் தோள்பட்டை வலி, தசை இறுக்கம், மூட்டு விலகல், சவ்வு கிழிதல் மற்றும் மூட்டு எலும்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் உடல் இயக்கப் பிரச்னைகளுக்குப் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளைப் பெற்றனர்.

​தோள்பட்டை பாதிப்புகள் குறித்து நிபுணர் ராஜா கூறியதாவது: பலரும் தோள்பட்டையில் ஏற்படும் லேசான காயங்களை அலட்சியப்படுத்துகின்றனர். கவனிக்காமல் விடும்போது, தோள்பட்டை எலும்புகளை இணைக்கும் கேப்சூல் சவ்வு இறுகிப்போக வாய்ப்புள்ளது. இதை புரோசன் ஷோல்டர் என்கிறோம்.​

இந்த பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்பத்தில் லேசான வலி இருக்கும், பின்னர் அது படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கும், பெண்களுக்கும் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. கை கால்களை முதுகுக்கு பின்னால் கொண்டு செல்வது, தலை சீவுவது, ஆடை அணிவது போன்ற அன்றாடச் செயல்களில் கடும் சிரமம் ஏற்படும். இரவு நேரங்களில் பாதிப்பு உள்ள பக்கமாகத் திரும்பிப் படுத்தால் வலி மிக அதிகமாக இருக்கும்.

பல மாதங்கள் நீடிக்கும் இந்தத் தோள்பட்டை வலி பாதிப்புகளை, மருந்து, ஊசி மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே பிசியோதெரபி மற்றும் முறையான உடற்பயிற்சிகள் மூலமாக முழுமையாகச் சரிசெய்து விடலாம். எனவே பொதுமக்கள் இப்பாதிப்பு குறித்துப் பயப்படத் தேவையில்லை எனத் தெரிவித்தார். மேலும் ஆலோசனைகளுக்கு 95007 12391 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Advertisement