5 முதல்வரின் சாதனைகளை கூறி பாகூரில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு 

பாகூர்: முதல்வர் ரங்கசாமி அரசின் சாதனைகளை கூறி, பாகூர் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் தியாகராஜன் ஓட்டு சேகரித்தார்.

பாகூர் தொகுதியில் தே.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் தியாகராஜன், கூட்டணி கட்சியினருடன் இணைந்து தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகிறார். நேற்று பாகூர் பங்களா வீதி மற்றும் மேற்கு வீதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன், கூட்டணி பா.ஜ. முன்னாள் எம்.எல்.ஏ., விக்ரமன், பா.ஜ., நிர்வாகி ருத்ரமூர்த்தி, ல.ஜ.க., ரீகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று, ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.

அப்போது, வேட்பாளர் தியாகராஜன் '' கடந்த 5 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணியில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறினார். மீண்டும் சாதனை திட்டங்கள் தொடர்ந்திட, முதல்வர் ரங்கசாமியின் தலைமையில் மீண்டும் புதுச்சேரியில் ஆட்சி அமைந்திட வேண்டும். அதற்கு, இந்த தொகுதியில் என்.ஆர்.காங்., சார்பில் போட்டியிடும் எனக்கு ஜக்கு சின்னத்தில் ஓட்டுகள் போட்டு வெற்றி பெற செய்திட வேண்டும் என கேட்டுகொண்டார்.

ஓட்டு சேகரிப்பின் போது, என்.ஆர்.காங்., பா.ஜ., அ.தி.மு.க, ல.ஜ.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement