பஸ் ஸ்டாண்ட் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

உடுமலை: உடுமலை அருகே, தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை, பொள்ளாச்சி தாலுகா எல்லையில் தேவனுார்புதுார் ஊராட்சி உள்ளது. இந்த இரண்டு தாலுகாவிலிருந்தும் டவுன் பஸ்கள் இந்த ஊருக்கு செல்கின்றன. மேலும், இரண்டு தாலுகாவிலிருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கிராமங்களுக்கு பஸ்கள் வாயிலாக செல்கின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த தேவனுார்புதுாரில், பஸ்கள் நிறுத்த பஸ் ஸ்டாப் மட்டுமே உள்ளது. இதனால், பஸ் நிறுத்த இடமில்லாமல் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.

எனவே, அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க ஊராட்சி நிர்வாகமும், உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement