கிரீன்விச் சராசரி நேரத்துக்கு பதிலாக மஹாகால் நேரத்தை கொண்டு வர வேண்டும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்
உஜ்ஜைனி:''உலகளாவிய கிரீன்விச் சராசரி நேரத்துக்கு பதிலாக, உஜ்ஜைனியை மையமாக கொண்ட, 'மஹாகால்' நேரத்தை கொண்டு வர வேண்டும்,'' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், 'மஹாகால்' எனப்படும், காலத்தின் தலைவன் என்ற பெயரில் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இதில் பங்கேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான் நேற்று பேசியதாவது:
ஆன்மிகத்திற்கும், அறிவியலுக்குமான துாரம் மறைந்த இடம் தான் உஜ்ஜைனி. இங்கு தான் காலத்தை பற்றிய புதிய பார்வை பிறந்தது. உஜ்ஜைனியில் காலக்கணக்கீடு என்பது மத சடங்காக இல்லாமல் அறிவியல் ரீதியாக இருந்தது. நம் முன்னோர் சூர்ய சித்தாந்தம் போன்று காலம் பற்றி பல நுால்களை எழுதி இருக்கின்றனர். நேரமும், வான சாஸ்திரமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. எனவே, உஜ்ஜைனியை வழிபாட்டுத் தலமாகவும் அறிவியல் மையமாகவும் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
நம் நாட்டில் சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் கோள்களின் நகர்வுகளை கொண்டே பழங்காலத்தில் காலத்தை கணக்கீடு செய்தனர். தற்போது உலக அளவில் பயன்படுத்தும் கிரீன்விச் சராசரி நேரத்தை விட, நம் முன்னோர் கணக்கிட்ட காலக்கணக்கீடு துல்லியமானது. ஆகவே, மெக்காலே மனநிலையில் இருந்து நம் நாடு விடுபட வேண்டும். காலனி ஆதிக்க கல்வி கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு, நம் பாரம்பரிய விஞ்ஞான கல்விக்கு மாற வேண்டும்.
பூமத்திய ரேகையும், கடக ரேகையும் ஒன்றாக சங்கமிக்கும் இடம் தான் உஜ்ஜைனி. புராதன காலத்தில் இங்கு இருந்து தான் உலக நேரத்தை கணக்கிட்டனர். அந்த வகையில் கிரீன்விச் சராசரி நேரத்தை கைவிட்டு, உலக அளவில், 'மஹாகால் நிலையான நேரம்' என்பதை நிர்மாணிக்க வேண்டும். அப்போது தான் நம் நாட்டின் விஞ்ஞான அறிவியலுக்கு உலகளவில் பெருமை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
@quote@ இது தான் வளர்ச்சியா? மற்றவர்கள் கட்டி அமைத்த நகரங்கள், சாலைகளின் பெயர்களை மாற்றுவது தான் பா.ஜ.,வின் வளர்ச்சியாக இருக்கிறது. வளர்ச்சிக்கான திட்டம் பா.ஜ.,வில் வறட்சி அடைந்து விட்டது. நேர கணக்கீட்டை மாற்றுவதோடு ஏன் நிறுத்த வேண்டும். நம் மொபைல் போன்கள், தொலைபேசிகளை கூட துாக்கி எறிந்துவிடலாம். மின்சார விளக்குகளுக்கு பதில் இனி வீட்டில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். ரஷீத் ஆல்வி செய்தித் தொடர்பாளர், காங்.,quote
காங்கிரஸ் அறிவிலியின் கூப்பாடு சிரிப்பாக வருகிறது. பாரத சரித்திரம் புரியாத இத்தாலி அடிமைகள்மேலும்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் 'சிசிடிவி' கேமராக்கள்: மத்திய உள்துறை செயலர் ஆஜராக கோர்ட் உத்தரவு
-
பாக்., உளவுத்துறை சதி முறியடிப்பு; 3 பயங்கரவாதிகள் பஞ்சாபில் கைது
-
23,400 புள்ளிகளை தாண்டும் வரை இறக்கம் நின்று விட்டதாக கூற முடியாது
-
மியூச்சுவல் பண்டுகளின் சொத்து 81.50 லட்சம் கோடி ரூபாய்
-
தொடரும் விற்பனை அழுத்தம் 6 மாதத்தில் 22 சதவீதம் சரிவு
-
பங்குகளை திரும்ப பெறும் அரபிந்தோ பார்மா