போலீஸ் ஸ்டேஷன்களில் 'சிசிடிவி' கேமராக்கள்: மத்திய உள்துறை செயலர் ஆஜராக கோர்ட் உத்தரவு
புதுடில்லி: நாடு முழுதும் போலீஸ் ஸ்டேஷன்களில், 'சிசிடிவி' எனப்படும், கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டத்தை அமல்படுத்தும் விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை செயலர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுதும் உள்ள போலீஸ் ஸ்டே ஷன்களில் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படாதது குறித்து, உச்ச நீதிமன்றம் தாமாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
மனித உரிமை மீறல்
போலீஸ் ஸ்டேஷன்களில் பெயருக்கு கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல், அவை முறையாக இயங்குகிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். குறிப்பாக, மனித உரிமை மீறல்கள் நடக்கிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், கண்காணிப்பு கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும் என, 2018ல் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
போலீஸ் ஸ்டேஷன்கள் மட்டுமின்றி, சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை முகமைகளின் அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் இடம் பெற வேண்டும் என, மீண்டும் 2020ல் கூறியிருந்தது.
குறிப்பாக, போலீஸ் ஸ்டேஷனின் நுழைவாயில், வெளியே செல்லும் பகுதி, 'லாக் - அப்'கள், 'லாக் - அப்'பின் வெளிப்புற பகுதி, வரவேற்பறை ஆகிய இடங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
இரவிலும் காட்சிகள் தெளிவாக தெரியும் வகையிலும், ஒலிப்பதிவு வசதி கொண்டதாகவும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்க வேண்டும். மேலும், ஓராண்டு வரை பதிவான காட்சிகளை சேமித்து வைத்திருக்க வேண்டும் என, அடுக்கடுக்காக உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில், இந்த வழக்கு நேற்று விசாரிக்கப்பட்டது.
அறிவுறுத்தல்
அப்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், நம் நாட்டின் காட்சிகளையும், தரவுகளையும் ரகசியமாக அந்நாட்டுக்கு அனுப்பி வைத்த விவகாரத்தை நீதிபதிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டனர்.
இதை த் தொடர்ந்து, 'போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் பிற முக்கிய இடங்களில் உள்ள சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்ற, மத்திய அரசு ஏதேனும் அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறதா?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ''அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை,'' என மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜா தாக்கரே தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டியுள்ளது. கடந்த முறை இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான கட்டமைப்புகள், சாத்தியக்கூறுகள் பற்றிய ஆலோசனை கூட்டத்திற்கு உயரதிகாரிகளை அனுப்பி வைக்காதது அதிருப்தி அளிக்கிறது. எனவே, அடுத்த முறை செயலர் பதவிக்கு குறையாத அதிகாரியை அனுப்ப வேண்டும்.
இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது மத்திய அரசின் உள்துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும். இந்த திட்டம் தொடர்பான ஒத்துழைப்பு, செயல்படுத்துவது குறித்து அவரிடம் இருந்து விளக்கத்தை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
போலீஸ் நிலையம் மாநில நிர்வாக கட்டுபாட்டில் உள்ளது. மாநில உள்துறை செயலர் தான் பதிலளிக்க வேண்டும். மத்திய உள்துறை கட்டுபாட்டில் மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் கொண்டுவர வேண்டும். சிபிஐ, அமுலாக்க துறை அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. தேச பாதுகாப்பில் உள்ள அமைப்புகள். நீதிமன்றம் நிர்வாக முறை தெரியாமல் தீர்வு கண்டு வருகிறது. குழப்பம் விளைவிக்க தான் உதவும். சீனா பொருள் போலி மற்றும் உளவறியும் கருவிகள் இணைக்கப்பட்டது ஏராளம். 90 சதவீத செல் போன், கம்ப்யூட்டர் , கேமரா போன்ற முக்கிய பொருட்கள் சீனா தயாரிப்பு. இவற்றை ஆய்வு செய்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். தாமதித்தால், சீனா, பாகிஸ்தான் அனைத்து விவரமும் சேகரித்து விடும்.
லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் உலகில் மிகக்குறைவு என்று அறிக்கை விட்டால் போதும். மற்றப்படி பாராளுமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
இதை கூடவா உச்ச நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் ? போலீஸ் துறை அதிகாரிகள் வேர் கடலை தின்று கொண்டு இருந்திருக்கிறது?
இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகளும் காவல் துறையும் மெத்தனமாக உள்ளதும்மேலும்
-
தேர்தல் அதிகாரிகள் சோதனை; ரூ. 1.40 லட்சம் பறிமுதல்
-
திருப்பரங்குன்றம் தி.மு.க., தொகுதியாக மாறும்: தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி பிரசாரம்
-
குடும்பத்தை காட்டிலும் திருமங்கலம் தொகுதி மக்களை அதிகம் நேசிப்பவர் என் தந்தை: வேட்பாளர் உதயகுமார் மகள் உருக்கம்
-
பொங்கல் உற்ஸவம்
-
காராங்காடு சர்ச்சில் பாஸ்கு விழா
-
கரூர் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி தீவிரம்