காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை

3

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 06) காலை குறைந்த 22 காரட் ஆபரண தங்கம் விலை மாலையில் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து, 13,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


@1brசர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் துவங்கிய பிறகு சற்று குறைந்து காணப்பட்ட தங்கம் விலை, கடந்த சில தினங்களாக இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்து வருகிறது.


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 03ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 13,850 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 800 ரூபாய் அதிகரித்து, 1,10,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


நேற்று முன்தினம் (ஏப்ரல் 04) தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் 255 ரூபாய்க்கு விற்பனையானது.


நேற்று (ஏப்ரல் 05) ஞாயிற்றுக்கிழமை என்பதால் வர்த்தக சந்தைக்கு விடுமுறை விடப்பட்டது.


இந்த நிலையில், வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 06) காலை தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து, 13,810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதிகரிப்பு



ஆனால், மாலையில் தங்கம் விலை சவரனுக்கு 1,140 ரூபாய் அதிகரித்து லட்சத்து 11 ஆயிரத்து 920 ரூபாய் ஆக விற்பனை ஆனது.

கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து, 13 ஆயிரத்து 990 ரூபாய் ஆக விற்பனை ஆகிறது.


வெள்ளி விலை





வெள்ளி விலையில் காலையில்எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், மாலையில் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 250 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement