பொதுத்துறை - தனியார் வங்கி பங்குகள் இனி முதலீடு செய்ய ஏற்றது எது? 'நோமுரா' காட்டும் 'கிரீன் சிக்னல்'

கடந்த ஓராண்டில், பொதுத்துறை வங்கி பங்குகள் 32 சதவீத லாபம் தந்துள்ள நிலையில், இனி வரும் காலங்களில் தனியார் வங்கி பங்குகளே முதலீட்டிற்கு சிறந்தவை என உலகளாவிய தரகு நிறுவனமான 'நோமுரா' தெரிவித்து உள்ளது.

அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பொதுத்துறை வங்கி பங்குகள் ஏற்கனவே 27 சதவீதம் கூடுதல் விலையில் வர்த்தகமாவதால், இனி மேல் உயர வாய்ப்பு குறைவு; வலுவான வருவாய் இருந்தும், தனியார் வங்கி பங்குகள் அவற்றின் 10 ஆண்டுகால சராசரி விலையை விட மலிவாக கிடைப்பதால், இது முதலீட்டாளர்களுக்கு ஒரு லாபகரமான வாய்ப்பாக அமையும்.

கடந்த 2024 செப்டம்பர் முதல் கடன் வழங்குவது 14.4 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும், அதற்கு இணையாக வைப்புத்தொகை உயராதது பொதுத்துறை வங்கிகளுக்கு பலவீனமாக உள்ளது. கையிருப்பில் இருந்த கூடுதல் நிதியை வைத்தே இதுவரை கடன் வழங்கப்பட்டுள்ளது; இந்த நிதி இன்னும் இரண்டு காலாண்டுகளில் தீர்ந்துவிடும் என்பதால், இனி கடன் வழங்குவது குறையலாம்.

பொதுத்துறை வங்கிகளின் லாபத்தில் 20 முதல் 40 சதவீதம் வரை வராக்கடன் மீட்பு போன்ற தற்காலிக வழிகளிலிருந்தே கிடைக்கிறது. வட்டி விகித மாற்றங்களால் இந்த வருவாய் எப்போது வேண்டுமானாலும் குறையலாம்.


தனியார் வங்கிகளை விட பொதுத்துறை வங்கிகள் அதிகப்படியான கடன்களை நம்பி இயங்குகின்றன. இதனால், கடன் செலவுகள் சிறிதளவு கூடினாலும் லாபம் பெரிய அளவில் பாதிக்கும்.



@block_B@ பரிந்துரை

தனியார் வங்கிகளில் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ், ஹெச்.டி.எப்.சி., மற்றும் கோட்டக் மஹிந்திரா ஆகியவற்றை வாங்க நோமுரா பரிந்துரைக்கிறது. 'எஸ்.பி.ஐ., மற்றும் பேங்க் ஆப் பரோடா' ஆகிய பொதுத்துறை வங்கிகளை வாங்கச் சொல்லியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக தனியார் வங்கிகளே அதிக லாபம் தரும் எனவும் கணித்துள்ளது.block_BLatest Tamil News

Advertisement