போலீஸ் செய்தி: கோயில் நகை திருட்டு

ராஜபாளையம்:ராஜபாளையம் சர்ச் தெரு அருகே மாரியம்மன் கோயிலில் சுவாமியின் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க தாலி, உற்ஸவர் சிலையில் 4 கிராம் எடை கம்மல், மூக்குத்தி என 14 கிராம் தங்க நகைகளை காணவில்லை.

இதுகுறித்து கண்காணிப்பு கேமராவில் பார்த்ததில் 50 வயது மதிக்கத்தக்க நபர் காவி வேஷ்டி அணிந்து பக்தர் போல் வந்தவர் திருடி சென்றது தெரிந்தது.

வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.



டூவீலர் திருடியவர் கைது

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே முகவூரை சேர்ந்தவர் வீரமணிகண்டன் 40, தனது சகோதரரின் டூவீலரில் தளவாய்புரம் கோயிலில் பால்குடம் எடுக்க வந்து கோயில் அருகே நிறுத்தி உள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது டூவீலரில் காணவில்லை. சோலைசேரி அருகே இரும்பு கடையில் டூ வீலரை விற்க நின்றிருந்தவரை பிடித்து தளவாய்புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கோவிலூரை சேர்ந்த சுந்தர் 28, எனத் தெரிந்தது போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement