தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

ஏப்ரல் 6 ஆம் தேதி காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, அரியலுார் மாவட்டம் ஜெயம்கொண்டம், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஆகிய இடங்களில், தலா, 8 செ.மீ., மழை பெய்துள்ளது.

தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்ரல் 7 ஆம் தேதி இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது, ஏப்., 12 வரை நீடிக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில பகுதிகளில், இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement