. மீண்டும் வெற்றி பெற்று மீதமுள்ள பணிகளை செய்வேன்: அமைச்சர் வேலு
திருவண்ணாமலை, ''கடந்த, 5 ஆண்டுகளில், திருவண்ணாமலை தொகுதியில் நிறைவேற்ற முடிந்த திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். மீண்டும் வெற்றி பெற்று மீதமுள்ள பணிகளையும் செய்வேன்,'' என, அமைச்சர் வேலு கூறினார்.
திருவண்ணாமலை சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக அமைச்சர் வேலு போட்டியிடுகிறார். இவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மனித வாழ்க்கையே நம்பிக்கை. அதன்படி நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். கடந்த, 5 ஆண்டில் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செய்திருக்கிறேன். கடந்த தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, 8 சட்டசபை தொகுதியில், 6 பேர் வெற்றி பெற்றனர். இந்த முறை, தி.மு.க., போட்டியிடும், 7 தொகுதி, போளூரில் கூட்டணி சார்பில் போட்டியிடும், தே.மு.தி.க., உள்ளிட்ட, 8 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். திருவண்ணாமலையில் நிறைவேற்ற முடியும் என்ற
திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்.
மீண்டும் வெற்றி பெற்று வந்து, தொடர்ந்து இன்னும், 5 ஆண்டுகள் இருந்தால் மீதமுள்ள பணிகளை செய்வேன். மக்களை எண்ணங்களை புரிந்து பணியாற்ற, இந்த தொகுதியில் நின்றுள்ளேன். டில்லியை தோற்கடிக்க வேண்டும் என்ற மன நிலையோடு, தேர்தலில், கூட்டணி கட்சியினரின் தோழமையுடன் பணியாற்றி வெற்றி பெறுவேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
மோடி, அமித் ஷா வாகனத்தை சோதனை செய்வார்களா: கேட்கிறார் வைகோ
-
மேலுார் காங்கிரஸ் வேட்பாளரை வெளியேற்றிய உள்ளூர் நிர்வாகிகள்
-
செந்தில்பாலாஜிக்கு மாற்றாக தம்பி அசோக்குமார்!
-
த.வெ.க., விஜய் சொல்வதெல்லாம் சாத்தியமற்றது: மார்க்சிஸ்ட்
-
மொத்தம் 7400 பேர் வேட்புமனு தாக்கல்; நாளை மறுநாள் வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்
-
ஈரான் உளவு பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டார்