மோடி, அமித் ஷா வாகனத்தை சோதனை செய்வார்களா: கேட்கிறார் வைகோ
மதுரை: பிரதமர் மோடி, அமித்ஷா பிரசார வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிடுவார்களா என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
@1brமதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது: மோடியும், அமித்ஷாவும் தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும் எத்தனை தொகுதிகளில் பிரசாரம் செய்தாலும் ஜெயிக்கப் போவதில்லை. ஆணவ சொற்களாக உதிர்த்து கொண்டிருக்கும் அமித்ஷா, படை பலத்தோடு வந்தாலும் வெல்ல முடியாது.
மதுரை தெற்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளர் பூமிநாதன் 30ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். முதல்வர் ஸ்டாலின் சென்ற காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர், தவறில்லை. 24 மணி நேரத்திற்குள் 2வது முறை நிறுத்தி சோதனையிட்டனர். பிரதமர் மோடி, அமித்ஷா விமானத்தில் வரும் போது எத்தனை ஆயிரம் கோடி ரூபாயுடன் வருகின்றனர் என்பது யாருக்காவது தெரியுமா.
அவர்களது பிரசார வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிடுவார்களா. அமித்ஷா விருப்பப்படி, அவருக்கு பக்கபலமாக இருக்கக்கூடிய தேர்தல் நடத்தும் அமைப்பு தருகின்ற ஊக்கம், தைரியத்தில் தான் முதல்வர் ஸ்டாலின் காரை மட்டும் சோதனையிடுகின்றனர் என்றார்.
வாசகர் கருத்து (37)
Venugopal, S - ,
07 ஏப்,2026 - 23:15 Report Abuse
கிரிமினல்களின் வண்டியை தான் சோதனை செய்வார்கள் 0
0
Reply
Nagarajan S - Chennai,இந்தியா
07 ஏப்,2026 - 20:21 Report Abuse
மிகப்பெரிதாக இருந்த வைகோவின் கட்சி மிகசுருங்கி, தன சொந்த சின்னத்தில்கூட போட்டியிடமுடியாமல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்த லட்சணத்தில் வாய்கிழிய என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறந்து? பறக்கும் படையினர் அனைத்து வாகனங்ஜ்களையும் தான் சோதனை இடுகின்றனர். திமுகவினர் வாகனங்களை மட்டும் இல்லை, பிஜேபி, அதிமுக, த வெ க, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள் ஆகிய அணைத்து கட்சியினரின் வானங்களையும் சோதனை இடுகின்றனர். அண்ணாமலை வந்த ஹெலிகாப்டராரை சோதனை செய்தனர். 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
07 ஏப்,2026 - 17:03 Report Abuse
தேர்தல் ஜுரத்தால் பித்தம் தலைக்கேரி பினாத்தும் அளவிற்கு மதிகெட்டு அலை கிறார். உக்கிரமான வெய்யிலின் தாக்கம் வேறு 0
0
Reply
kjpkh - ,இந்தியா
07 ஏப்,2026 - 16:21 Report Abuse
அரசியலிலே இருக்க தகுதியில்லாதவர் நீங்கள் பம்பர சின்னத்தையே நான்கு தொகுதிகளுக்கும் வாங்க துப்பில்லை. உப்புச்சப்புள்ளாத விஷயத்துக்கு எல்லாம் சவால் விடுவார் கைப்புள்ள. 0
0
Reply
seenipandi s - ,
07 ஏப்,2026 - 16:07 Report Abuse
நீ ஒரு பைசாவுக்கு கூட லாயக்கில்லை, நீயே ரொம்ப பேசுகிறாய், வாயை மூடு, modiji is a honerable person, you are theft. 0
0
Reply
Venkateshkumar Dharmaraj - Abudhabi,இந்தியா
07 ஏப்,2026 - 15:26 Report Abuse
Modi ji and Amitshah ji are widely regarded as honest and committed to public service, without engaging in practices such as exchanging money for votes. The practice of vote‑buying reflects an unhealthy political mindset and undermines democratic values. It was started in Tamilnadu by DMK in the Thirumangalam Bye Election. Such issues should be addressed responsibly, and senior public figures are expected to speak with care and uphold ethical standards. 0
0
Reply
ponssasi - chennai,இந்தியா
07 ஏப்,2026 - 15:24 Report Abuse
போலீஸ் அவர்களின் முகத்தை பார்த்தே கண்டுபிடித்துவிடுவார்கள். நேர்மையான நபர் சென்றால் அவர்களை கொண்டுகொள்ளமாட்டார்கள். 0
0
Reply
samvijayv - Chennai,இந்தியா
07 ஏப்,2026 - 14:29 Report Abuse
திரு.வைகோ வீட்டில் உள்ளவர்களையோ அல்லது அவர்களின் உறவினர்களையோ ஏதேனும் குற்ற பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய முடியுமா?. 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
07 ஏப்,2026 - 12:13 Report Abuse
உங்க கட்சி பேரு என்ன மறந்துட்டே கொஞ்சம் சொல்லுப்பா 0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
07 ஏப்,2026 - 11:27 Report Abuse
ஒரு முறை மோடி அவர்கள் வந்த ஹெலிகாப்டர் சோதனை செய்யப் பட்டது. 0
0
Reply
மேலும் 27 கருத்துக்கள்...
மேலும்
-
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி; பிரேமலதா நம்பிக்கை
-
கஸ்டம்ஸ் சாலை விரிவுபடுத்தப்படும் ;அ.தி.மு.க.வேட்பாளர் உறுதி
-
அமைச்சர் கணேசன் ஓட்டு சேகரிப்பு
-
தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் தரும் கேள்விகள்
-
பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து ;கல்லுாரி மாணவர் கால் அகற்றம்
-
சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பு: 10 படகுகள் பறிமுதல்
Advertisement
Advertisement