செந்தில்பாலாஜிக்கு மாற்றாக தம்பி அசோக்குமார்!
கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக, அவரது தம்பி அசோக்குமார் மனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று திங்கள் கிழமை முகூர்த்த தினம் என்றாலும், காலை 10:30 - 12:00 மணி வரை எமகண்டம்.
அதனால், வேட்பு மனு தாக்கலுக்கு, மதியம் 1:00 - 1.30 மணி வரை தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜி பதிவு செய்திருந்தார்.
மதியம் 1:00 மணிக்கு மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் வந்த அவர், மனு தாக்கல் செய்தபோது, மனுவில் கையெழுத்திடும் முன், அங்கிருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்து, மதியம் 1:10 மணிக்கு கையெழுத்திட்டார். ஏனெனில், நேற்று மதியம் 1.30க்கு மேல் குளிகை காலம். மேலும், செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தபோது, கையில் எலுமிச்சை வைத்திருந்தார்.
வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே வர வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், செந்தில் பாலாஜியுடன் கூட்டணி கட்சியினர், வக்கீல்கள் என ஒன்பது பேர் இருந்தனர். அவர்களை தேர்தல் பிரிவினரும், போலீசாரும் வெளியேற்றவில்லை. இதையடுத்து, கோவை தெற்கு தொகுதியில், செந்தில் பாலாஜிக்கு மாற்று வேட்பாளராக, அவரது தம்பி அசோக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் மனு தாக்கல் செய்தபோது, கண்ணாடி அணிய மறந்து விட்டார். உறுதிமொழி வாசிக்கச் சொன்னபோது, வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறினார். ஏற்கனவே, கரூர் தொகுதியிலும் தி.மு.க., வேட்பாளர் ஆசி.தியாகராஜனுக்கு மாற்று வேட்பாளராக, செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயிலுக்கு போயிட்டுவந்தவன், தலைமறைவாக என்றுசொல்லி போலீஸ் பாதுகாப்பில் இருந்தவன் கடத்தல்பேர்வழி இப்படி.. தேர்தலில் போட்டியிடும் தகுதியானவர்கள்
தமிழ்நாட்டை நினைத்து தமிழர்களாகிய எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது???????
எங்களுக்கே தெரியுது இந்த அசோக்கு காவல்துறையும் அமலாக்க துறை தேடும் பயங்கர குற்றவாளி என்று.
தேடப்படும் குற்றவாளியா ஒரு காலத்துல இருந்தவங்க வேட்பு மனு தாக்கல் பண்ணுவது ஜனநாயகமா ???? பணநாயகமா ????
எலுமிச்சம்பழம் கையில வெச்சுகிட்டு காலம் நேரம் பார்த்தா மட்டும் எல்லாம் சரி ஆயிடுமா.. நாம் தலைகனத்துடன் ஆணவத்துடன் அகங்காரமாக தலைவிரித்து ஆடும் காலம் வரை காலம் காத்திருக்கும்.. நாம் ஓயும்பொழுது, கட்டங்கள் மாறும்பொழுது காலம் தனது உக்கிர தாண்டவத்தை ஆரம்பிக்கும்.. காலத்தின் ஆட்டம், அக்கிரமவாதிகள், அயோக்கியத்தனம் செய்தவர்களால் தாங்கவே முடியாது...
ரெண்டுலே எவன் அப்ரூவராக மாறினாலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்குத்தான் ஆப்பு. மாறன் ப்ரொதேர்ஸ் போல பாலாஜி பிரோதெரஸ் . எங்க திரும்பி lனாலும் கண்ணிவெடி வெச்சா ஒரு மனுசன் என்னதான் பன்னுவாரு
செ பா ஜெயிலுக்கு போயி முந்திரி பதவி வகிச்சவரு. அசோக்கு குமாரு காணாம போயி டமிலக புலீஸ்க்கே டிமிக்கி குடுத்தவரு. அகப்பட்ட வனை அடிச்சே கொலை பண்ற டமிலக புலீஸ்க்கே சவால் விட்டவரு. இந்த அசோக்கு குமாரு செ பா அளவுக்கு வசூல் ராஜா வான்னு தெரியலை. ஆனா ஒண்ணு திருட்டு தீய முக காரனுங்க ஆதாயமில்லாம சீட்டு தரமாட்டான்களே.
காவல்துறை என்ன செய்கிறது.
இவரை தான் தேடி கொண்டு இருந்தார்கள்? பேசாமல் தேர்தல் வரும் வரை விட்டு இருந்தால் செலவு மிச்சம் ஆகியிருக்கும்
எலுமிச்சை இருக்கட்டும், தேர்தலுக்கு பிறகு தலையில் தேய்த்துக்கொள்ள உதவும்.
bayam
தேர்தல் ஆணையம் நேர்மையுடன் செயல்படுவதில்லை என்று நான் பலமுறை கருத்து எழுதி இருக்கிறேன். பல அன்பர்கள் என்னை அன்புடன் ஒருமையில் வசைபாடி இருக்கிறார்கள். எனது கருத்துக்கு மேலும் ஒரு சான்று.வேட்பாளர் மனு தாக்கல் செய்ய கூட்டமாக வந்ததைக் கண்டும் அனுமதி அளித்த தேர்தல் ஆணையம்.மேலும்
-
இண்டக் ஷன் அடுப்புக்கு எரிசக்தி விதிகளில் சலுகை
-
'சீட்' கிடைக்காதவர்களுக்கு பொறுப்பு வழங்கிய பா.ஜ.,
-
தமிழகம் முழுதும் வேட்புமனு பரிசீலனை; ஸ்டாலின், பழனிசாமி, விஜய் மனு ஏற்பு
-
மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டோர் 91 லட்சம்! இறுதி பட்டியலை வெளியிட்டது தேர்தல் கமிஷன்
-
ஜவுளி துறை பி.எல்.ஐ., திட்டம் விரிவாக்கம்
-
மின் வாகனங்கள் விற்பனை 25 லட்சத்தை நெருங்கியது