சீர்காழியில் முதல்வர் ஸ்டாலின்; நடைபயிற்சியில் ஓட்டு சேகரிப்பு
மயிலாடுதுறை: சீர்காழி தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டு ஓட்டு சேகரித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நேற்று சென்ற அவர், இன்று அதிகாலை சீர்காழியில் நடைபயிற்சி மேற்கொண்டு பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது, கூட்டணி கட்சியான மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.
பொதுமக்களிடமும், கல்லூரி மாணவிகளிடமும் கலந்துரையாடினார். அப்போது, சிலர் அவருடன் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும், அங்குள்ள டீக்கடையில் மக்களுடன் மக்களாக அமர்ந்து டீக்குடித்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இப்படிக்கு நானும் டெல்டா காரன்...
மற்ற கட்சித் தலைவர்கள் காலையில் நடைப்பயிற்சி செல்ல மாட்டார்களா? அங்கேயெல்லாம் பத்திரிகையாளர்கள் செல்ல மாட்டார்களா? இப்படியெல்லாம் விளம்பரம் செய்து ஓட்டு வாங்க வேண்டுமா?
அப்படியே பொடிநடையா துபாய்க்கு ட்ரிப் அடிச்சு அங்கு போட்ட முதலீடுகள் பத்திரமா இருக்கான்னு பாத்துட்டு வாங்க. அப்படியே ஏதாவது நடந்தா சந்தோஷம்.
ஆதானிக்கு ஜால்றா போதாதோ ? அவரை வளர்த்து விட்டு பயன் பெறுவது உங்கள் ஆதரவு ?????
போன வாரம் திருச்சிக்கு வந்தார் முதல்வர் அவர் கூட்டம் போட்ட இடத்தில் இருந்து பத்து அடி தூரம் தான் உய்யக்கொண்டான் வாய்க்கால் மக்களின் கேள்வி அந்த வாய்க்காலில் இறங்கி கை கால்களை கழுவி விட்டு சென்று விட்டிருந்தால் மக்கள் ஓட்டு போட்டிருப்பார்கள் நாங்கள் தண்ணீரை குளிக்கவும் சொல்லவில்லை ஏனென்றால் ஒரு காலத்தில் திருட்டு மாடலுக்கு முன்பாக குளிக்கவும் குடிக்கவும் அந்த நீரை பயன்படுத்திய மக்கள் தான் திருச்சி நகரவாசிகள் இதை செய்துவிட்டு சென்றிருக்க வேண்டும் வோட்டு தானாக விழுந்திருக்கும்
சீர்காழியில் முதல்வர் சீர் அளிப்பது தாக கேள்வி... தேர்தல் வந்தாதான் டீ கடை, பெட்டி கடை, விவசாயி கன்னுக்கு தெரியும்... இது எல்லாம் மாயை ... மக்கலுக்கு புரியனும்
பிரியாணி ஹோட்டல் என்றால் பிரச்சனை வரும். சட்டியை தூக்கி கொண்டு செல்ல தொண்டர் கூட்டம் வரும். டீ, பஜ்ஜி மட்டும் என்றால் 20 ரூபாயுடன் முடிந்தது.
வெல்வோம் ஒன்றாக , எல்லோருக்கும் எல்லாமும் , ஓரணியில் தமிழகம் , ஒன்றிணைவோம் வா , உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ,உங்களுடன் ஸ்டாலின் , மக்களை தேடி மருத்துவம் , இல்லம் தேடி கல்வி , நான் முதல்வன் திட்டம் , தவ புதல்வன் திட்டம் , புதுமை பெண் , உங்கள் கனவை சொல்லுங்கள் ,No 1 முதலமைச்சர் ஸ்டாலின் இது மட்டும் இன்றி காலை உணவு திட்டம் இப்படி திட்டங்களை செயல் படுத்தியவருக்கே வோட்டு, பாவம் NDA விழி பிதுங்கி அலற ஆரம்பித்து விட்டார்கள்
ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் கிடைத்ததா?
“மோடி கொடுத்த வாக்குறுதிப்படி, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய், ‘பொத்தென்று’ வந்து விழுந்ததா? விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்று சொன்ன வாக்குறுதி என்னாயிற்று? ஆண்டுதோறும் 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு வந்ததா? இதை எல்லாம் கேளுங்கள் மோடி ஷா வந்தா
ஹிந்தி தெரியாத முரசொலி தற்குறி மோடி எப்ப அப்படி சொன்னாரு. தேர்தல் வாக்குறுதி கொடுத்தாரா. உங்க திராவிட அப்பா சொன்ன வாக்குறுதியை நிறைவேத்திட்டாரா. உங்க திராவிட அப்பாவோட அப்பா சொன்ன 2acre நிலம் இன்னும் யாருக்கும் கொடுக்கல. மாசம் மின் கட்டணம், டாஸ்மாக், நகை கடை தள்ளுபடி, நீட் ரகசியம் எனக்கு மட்டும் தெரியும் னு ஒருத்தர் சொல்லிட்டு வோட் கேட்டாருல்ல.
பதனில சர்க்கரை போட்டு இருக்கீகளா...
வயல் வெளியில் சிமெண்ட் ரோடு..
எத்தனை நடிப்பு டா சாமி
தேர்தல் வந்தாலே டீ கடை, நடை பயிற்சி, செல்பீ எல்லாம் செட் ஆகிவிடும்.