சமரச தீர்வுமையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்
சூலூர்: சூலூர் கோர்ட்டில் சமரச தீர்வு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சமரச தீர்வு சூலூர் கோர்ட்டில், சூலூர் சமரச தீர்வு மையம் சார்பில், சிறப்பு சமரச தீர்வு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
குற்றவியல் நீதிமன்ற நீதிபதியும், சமரச தீர்வு மைய தலைவருமான அருண்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதியும், தீர்வு மையத்தின் துணைத்தலைவருமான சந்தோசம் முகாமில் பங்கேற்று, விழிப்புணர்வு நோட்டீஸ்களை, பொதுமக்களுக்கு வழங்கினர்.
ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும், சமரச தீர்ப்பாளர் வாயிலாக, சமரசம் பேசி சமூகமாக முடித்து கொள்ளலாம். கோர்ட்டில் கட்டிய கட்டணத் தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். சமரச தீர்வு மையம் சார்பில், குடும்ப வழக்கு, செக் மோசடி வழக்கு, பாகப்பிரிவினை குற்ற வழக்குகளில் சமரசம் செய்யக்கூடிய சொத்து வழக்குகள், வாகன விபத்து இழப்பீட்டு வழக்கு மற்றும் வங்கி கடன் வழக்கு, தொழிலாளர் வழக்குகளில் சமரசம் செய்து தீர்க்கப்படும். வரும், 17 ம்தேதி வரை முகாம் நடக்க உள்ளது. சமரசம் செய்து கொள்ள விரும்புவோர் பங்கேற்று பலன் பெறலாம், என, சமரச தீர்வு மையத்தினர் கூறினர்.
சூலூர் சமரச தீர்வு மைய உறுப்பினர்கள் கவின்பாரதி, விஜயகுமார், நாச்சிமுத்து, சூலூர் வக்கீல் சங்க தலைவர் கந்தநாதன், மைய வழக்கறிஞர்கள் தமிழ்செல்வி, ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும்
-
பொதுத்துறை - தனியார் வங்கி பங்குகள் இனி முதலீடு செய்ய ஏற்றது எது? 'நோமுரா' காட்டும் 'கிரீன் சிக்னல்'
-
மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் 6 உத்தரவாதம்
-
அசாம், கேரளா, புதுச்சேரி ஓட்டு பதிவுவிறுவிறு! ; 85, 78, 91.23 சதவீத வாக்காளர்கள் சாதனை
-
உர நிறுவன பங்குகள் 6 சதவீதம் வரை உயர்வு
-
தென் மாவட்டங்களை ஆட்டி படைக்கும் ஜாதி சார்பு போலீஸ் அமைப்புகள்
-
நவாஸ்கனி சொத்து குவிப்பு வழக்கு: சி.பி.ஐ., விசாரணை அறிக்கை தாக்கல்