வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை :அரசு மீது மாஜி முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணி ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

ராஜ்பவன் தொகுதி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி., பள்ளி ஓட்டுச்சாவடியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று ஓட்டு அளித்தார். பின், அவர், கூறுகையில், 'இந்த தே.ஜ., கூட்டணி ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் நடக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. பெஸ்ட் புதுச்சேரியாக அல்ல, ஒஸ்ட் புதுச்சேரியாக மாற்றியுள்ளனர். ரெஸ்ட்டோ பார்களை திறந்தது தான் முதல்வர் ரங்கசாமியின் சாதனை' என்றார்.

Advertisement