வாழைத்தார் விலை சரிவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைந்த நிலையில், விலையும் சரிந்ததால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கிணத்துக்கடவு சுற்றுப்பகுதி விவசாயிகள், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்யும் வாழைத்தார்களை தினசரி மார்க்கெட்டில் ஏல முறையில் விற்பனை செய்கின்றனர்.

மார்க்கெட்டில், நேற்று செவ்வாழை மற்றும் கதளி கிலோ - 30, நேந்திரன், பூவன் மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் கிலோ - 20, ரஸ்தாளி - 40 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை விட, செவ்வாழை மற்றும் நேந்திரன் கிலோ - 5, பூவன் - 10 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் - 25 ரூபாய் விலை குறைந்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், விலையும் சரிந்ததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். வரும் நாட்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.

Advertisement