ஸ்டாலின் பொதுக்கூட்டத்திற்கு இடம் தேடும் தி.மு.க.,வினர்
ஆண்டிபட்டி;தமிழகம் முழுவதும் வி.ஐ.பி.,க்கள் தேர்தல் பிரசாரம் வேகம் எடுத்து வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் 17 ல் பிரசாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
ஆண்டிபட்டி தி.மு.க., வேட்பாளர் மகாராஜன், கம்பம் தி.மு.க., வேட்பாளர் ராமகிருஷ்ணன், போடி தி.மு.க., வேட்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பெரியகுளம் (தனி)தொகுதி கூட்டணி கட்சியான வி.சி.வேட்பாளர் சக்திவேல் நால்வரையும் ஒரே மேடையில் நிறுத்தி பொதுக்கூட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் கூடும் வகையில் அதற்கு பொருத்தமான இடம் தேனி மாவட்டத்தில் எங்குள்ளது, அந்த இடத்தில் கூட்டம் நடத்துவதால் பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் கட்சியினருக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். ஸ்டாலின் கூட்டத்தை தங்களுக்கான தொகுதியில் நடத்தினால் தொகுதியில் தங்களுக்கான செல்வாக்கு உயரும் என்ற நம்பிக்கையில் தி.மு.க., வேட்பாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள இடங்கள் குறித்து மேலிட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து வருகின்றனர்.
மேலும்
-
ராகுலுக்கு சரத் பவார் அட்வைஸ்!
-
வழக்கு விசாரணைக்கு ஏ.ஐ.,: குஜராத் போலீஸ் அறிமுகம்
-
தார்வாட் மாவட்ட இளைஞர் காங்., பொதுச்செயலர் வெட்டிக்கொலை
-
பாக்.,கில் ஈரான் அதிகாரி - அமெரிக்க துணை அதிபர் அமைதி பேச்சு
-
லடாக் மக்களின் ஆதாரில் ஜம்மு - காஷ்மீர் நீக்கம்
-
சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில் இன்று கரகம், தீமிதி விழா கோலாகலம்