லடாக் மக்களின் ஆதாரில் ஜம்மு - காஷ்மீர் நீக்கம்
லே: ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக, 2019ல் அறிவிக்கப்பட்டன.
எனினும், லடாக் மக்களின் ஆதார் அட்டையில் அவர்கள் ஜம்மு - காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. இதனால், பல்வேறு அரசு சேவைகளை பெறுவதிலும் லடாக் மக்களுக்கு சிக்கல் நீடித்தது.
இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பின் இந்த குறைபாடு தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆதாரில் இதுவரை இருந்த ஜம்மு - காஷ்மீர் அடையாளம் நீக்கப்பட்டு, லடாக் மக்களுக்கு என தனி அடையாளம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன், யூனியன் பிரதேச நிர்வாகம் பேச்சு நடத்தியது. இதன் பலனாக, ஆதார் தரவுகளில் மாநிலத்தின் பெயர் 'லடாக்' என முறைப்படி மாற்றப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்சம் வாங்கியதை நிரூபித்தால் நெருப்பில் குதிக்கிறேன்: அமைச்சர் துரைமுருகன்
-
தி.மு.க.வினர் தேர்தல் பணி மந்தம்: 'நிதி சென்று சேரவில்லை' என புகார்
-
ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்: சி.இ.ஓ.
-
பிரசாரத்தில் இணைந்த அமைச்சர்கள்
-
குண்டூசி முதல் அழியா மை வரை... வாக்குச்சாவடி பொருட்கள் வந்தன
-
தலைமையிடமாக பெருமாநல்லுார் புதிய தாலுகா உருவாக்கப்படும்: அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் வாக்குறுதி
Advertisement
Advertisement