விவாகரத்து வழக்கிற்கு கோர்ட் வந்த கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி ;உளுந்துார்பேட்டை கோர்ட்டில் பரபரப்பு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை கோர்ட்டுக்கு விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த கூலித் தொழிலாளி திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 35; கூலித் தொழிலாளி. இவருக்கு, கடந்த 2013ம் ஆண்டு தேவியனந்தல் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பாதுார் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
சுரேஷ்பாபு, அவ்வப்போது குடித்துவிட்டு அம்பிகாவிடம் தகராறு செய்து அடித்து உதைத்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அம்பிகா, சுரேஷ்பாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு உளுந்துார்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
நேற்று காலை 10:30 மணியளவில் வழக்கு விசாரணைக்காக உளுந்துார்பேட்டை கோர்ட்டுக்கு சுரேஷ் பாபு, அம்பிகா வந்திருந்தனர்.
அப்போது கோர்ட் வளாகத்தில் விவாகரத்து வழங்கக் கூடாது எனக்கூறி சுரேஷ்பாபு கொண்டு வந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
தேன் இறக்குமதி விலை டிச., 31 வரை நீட்டித்தது அரசு
-
அமெரிக்க 'மேஜிக்' ஜவுளி கண்காட்சி ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க அரசு மானியம்
-
'மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல்': காங்., தலைவர் கார்கே குற்றச்சாட்டு
-
பேக்கேஜிங் பொருட்கள் விலை உயர்வு ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில் பாதிப்பு
-
முருங்கை ஏற்றுமதி 40% சரிவு உள்நாட்டில் விற்க முயற்சி
-
காசோலைகள் பணமின்றி திரும்பினால் இயக்குநர்களை தண்டிக்க முடியாது 'செக் பவுன்ஸ்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு