அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் :அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு உறுதி

உளுந்துார்பேட்டை: 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும்' என உளுந்துார்பேட்டை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேசினார்.

இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு ஏ.கொளத்துார், பூண்டி, சீதேவி, புகைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அவர் பிரசாரம் செய்து பேசுகையில், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி மக்களுக்கான திட்டங்களை் செயல்படுத்தினார். கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மருத்துவக் கல்லுாரிகளைக் கொண்டு வந்தார்.

அ.தி.மு.க., ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டம், மலிவு விலையில் அம்மா மருந்தகம், அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் தி.மு.க.. ஆட்சியில் முடக்கி வைத்துள்ளது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், வீடு இல்லா ஏழைகளுக்கு ஒரு ரூபாய் செலவு இல்லாமல் கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்' என்றார்.

அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்புராயன், த.மா.கா., மாவட்ட தலைவர் அதையூர் பாண்டியன், பா.ம.க., மாவட்ட தலைவர் சத்யா, முன்னாள் மாவட்ட தலைவர் ஜெகன், பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் அருள், புரட்சி பாரதம் கட்சி மாநில துணை செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement