காலாவதியான சாக்லெட் சாப்பிட்ட 14 மாணவ, மாணவிகள் 'அட்மிட்' :கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு
கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் துவக்கப் பள்ளியில் காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட 14 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 75 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் கொடுத்த சாக்லேட்டை மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் சாக்கேலட் சாப்பிட்ட மாணவர்களில் சிலருக்கு வாந்தி, வயிற்றுவலி மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடன், உடல் ஒவ்வாமை ஏற்பட்ட 5ம் வகுப்பு மாணவர் ரோஷித்,10; 4ம் வகுப்பு மாணவிகள் ஸ்ரீதரணி, 9; சஞ்சிதா, 9; வைஷ்ணவி, 9; உட்பட 14 மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் அரசு மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே விசாரணை நடத்தினர். அதில், மாணவர்கள் காலாவதியான சாக்லேட் சாப்பிட்டது தெரிந்தது.
இதையடுத்து காலாவதியான சாக்லேட் கொடுத்த பெண் மற்றும் எந்த கடையில் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., முருகன் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் உடல் நலம் மற்றும் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இச்சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
தேன் இறக்குமதி விலை டிச., 31 வரை நீட்டித்தது அரசு
-
அமெரிக்க 'மேஜிக்' ஜவுளி கண்காட்சி ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க அரசு மானியம்
-
'மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல்': காங்., தலைவர் கார்கே குற்றச்சாட்டு
-
பேக்கேஜிங் பொருட்கள் விலை உயர்வு ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில் பாதிப்பு
-
முருங்கை ஏற்றுமதி 40% சரிவு உள்நாட்டில் விற்க முயற்சி
-
காசோலைகள் பணமின்றி திரும்பினால் இயக்குநர்களை தண்டிக்க முடியாது 'செக் பவுன்ஸ்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு