நெல்லுக்கு ஊக்கத்தொகை அளிப்பதை நிறுத்த மத்திய அரசு கடிதம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
தஞ்சாவூர்: நெல்லுக்கு அளித்து வரும் ஊக்கத்தொகையை நிறுத்தக்கோரி மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது என்று தஞ்சாவூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கண்டிப்பாரா
தஞ்சாவூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 100 சதவீதம் வெற்றியை கொடுங்கள். தஞ்சாவூர் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. நிறைய பணிகள் செய்த காரணத்தினால், கம்பீரமாக, தைரியமாக, திமிராக வந்து நிற்கிறேன்.
இபிஎஸ், ஓனர் பாஜ அரசு, தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தை அதிகாரிகள் காட்டினர். இப்படிக்கூட ஒருவரால் யோசிக்க முடியுமா என்பது போல் அந்தக் கடிதம் அமைந்துள்ளது.
அதில், தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி பெருகி வருகிறது. இதனால் நிறைய பிரச்னை வருகிறது. இதனால் நெல்லுக்கு அளித்து வரும் ஊக்கத்தொகை நிறுத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
நெல்லுக்கு அளித்து வரும் ஊக்கத்தொகையை நிறுத்தக்கோரி கடிதம் அனுப்பி உள்ளனர். இதற்கு பாஜவை இபிஎஸ் கண்டிப்பாரா? வெட்கம் சூடு சொரணை இருந்தால் கண்டிப்பாரா?
ஒரு நாள் போதாது
4 ஆண்டு காலம் போலி விவசாயியாக இருந்த இபிஎஸ் ஆட்சியில், நெல்லுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை ரூ.1 கூட உயர்த்தவில்லை. பச்சை துண்டு போட்டுக் கொண்ட இபிஎஸ் பச்சைத் துரோகம் தான் செய்தார். பாஜவும், அதிமுகவும் சேர்ந்த நெல் விலையை உயர்த்துவதை தடுக்க என்ன செய்தாலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முறியடிப்பார் உலகத்துக்கே உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வேன். முடிந்தால் தடுத்துப்பாருங்கள்.
இபிஎஸ் ஆட்சியில் செய்தது வேதனைதான். இபிஎஸ் , விவசாயிகளுக்கு செய்த துரோகத்தை சொல்ல ஒரு நாள் போதாது. காவிரி காப்பாளன் என தனக்கு தானே அறிவித்து கொண்டார். விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தால், வேளாண் சட்டத்திற்கு ஆதரவு அளித்திருப்பாரா? போராடிய விவசாயிகளை கொச்சைப்படுத்தினார்.
முதல்முறை
சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல உணவகங்கள் மூடிவிட்டனர். சில உணவுகள் மட்டுமே தயாரித்து வருகின்றனர். அவசர ஆலோசனை கூட்டத்தை மோடி கூட்டியும் ஒன்றும் பேச முடியவில்லை.
பாஜ ஆளாத மாநிலங்களில் அதிகாரிகளை பந்தாடுவதில் கவனம் செலுத்த முயன்றனர். எஸ்ஐஆர் மூலம் கோடிக்கணகான வாக்குரிமையை பறித்துள்ளனர்.தமிழகத்தில் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை நியமித்து தில்லுமுள்ளு நடத்த முயல்கின்றனர். எத்தனையோ தேர்தல்களை தமிழகம் பார்த்துள்ளது.
அமைதியான தேர்தலுக்கு தமிழகம் தான் சிறந்த உதாரணம்.அப்படிப்பட்ட நமது மாநிலத்தில் முதல்முறையாக தேர்தலை காரணம் காட்டி தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளை மாற்றிவிட்டனர்.
உழைப்பை நம்பி
மக்களே திராவிட மாடல் 2.0 என முடிவு செய்துவிட்டனர்.இதனை பாஜ , தேர்தல் கமிஷன் உணரவில்லை. 2021 ல் ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் யோகம் இல்லை என்றனர். யோகத்தை நம்பி சும்மா இருப்பவனா இந்த ஸ்டாலின்.அதிர்ஷ்டம் இல்லை என அலுத்துக்கொள்கிறவனா இந்த ஸ்டாலின். நான் யோகத்தை நம்புகிறவன் அல்ல. உழைப்பை நம்புகிறவன். கருணாநிதியின் உழைப்பை கற்றுக் கொண்ட மாணவன் நான்.
இந்த தேர்தலின் போது, திமுகவில் யாரும் தொடர்ந்து 2 முறை முதல்வர் ஆனவர் இல்லை. போன முறை நீங்கள் கூறியதை உடைத்து முதல்வர் ஆனேன். 2வது முறை இல்லை என்று சொல்கிறார்கள். அதனை உடைக்கிறேன் பாருங்கள். அனைத்தையும் உடைத்து அதிக தொகுதிகளில் வென்று ஆட்சிக்கு வருவோம்.
எதிரிகள் வெட்டிக்கதை பேசிவிட்டு கனவு காண்கிறார்கள். நாம் தமிழகத்தை முன்னேற்றும் கனவு காண்போம். 10 ஆண்டு தொடர்ந்து ஆளும் வாய்ப்பு தமிழகம் கிடைக்கும். கிடைத்தால், தமிழகம் வளர்ச்சி எப்படி இருக்கும் என 2031 ல் காட்டுவோம்.
நடக்காது
ஸ்டாலின் போய் சேர வேண்டும் என அடிமனதில் இருப்பதை, வக்கிரங்களை இபிஎஸ் பேச ஆரம்பித்துவிட்டார். மரணம் ஒரு நாள் அனைவருக்கும் வரும். எனக்கும் வரும். ஆனால், ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் தமிழகத்தில் நிலைத்து நிற்கும். தலைசிறந்த தமிழகத்தை, தலைநிமிர்ந்த தமிழகத்தை உருவாக்க சக்தியை மீறி உழைப்பேன். திமுக, ஸ்டாலின் இருக்கும் வரை இபிஎஸ் கனவு நடக்காது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
ஊக்கத் தொகை கிடைப்பதால் ஒரே பயிரை தொடர்ந்து பயிரிட்டு நில வளத்தை சிதைக்கிறார்கள் . நாட்டின் ஓராண்டு தேவைக்கு மேல் பன்மடங்கு நெல் விளைந்துள்ளது. அதில் பாதியளவு மக்கி வீணாகும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் பலரை மாற்றுப் பயிர்களுக்கு மாற ஊக்கம் தர வேண்டியுள்ளது. இந்நிலையில் நெல்லுக்கு ஊக்கத் தொகை அளிப்பது வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி கொடுத்த புகாரை பொதுவெளியில் வெளியிட்டது போல அந்த கடிதத்தையும் பொது வெளியில் வெளியிடுங்கள்... நீங்கள்தான் தைரியமாக மத்திய அரசை எதிர்த்து நிற்பவர் ஆயிற்றே...
விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய உங்களால் முடியாமல் ஏழை விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளை விட்டு கண்ணீரில் மிதக்க வைத்தது. நெல்லை சேமிக்க கிடங்குகளை கட்டாமல் அழிய விடுவதற்கு பதில் ஊக்கமளிக்காமல் இருந்து விடலாம்.
இதெல்லாம் எந்த மாநிலத்தில் நடந்தது தமிழ்நாட்டில் அப்படி நிகழவே இல்லை
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுய்யா...? “நெல்லுக்கு ஊக்கத் தொகை அளிப்பதை நிறுத்த சொல்லி மத்திய அரசு கடிதம் அனுப்பியதா...? இல்லையா...?” அதுதான் கேள்வி...? மொதல்ல அதுக்கு பதில் சொல்லு...?
தமிழ்நாட்டில் இதெல்லாம் நடக்கலேன்னு சொல்ற இவரு நிச்சயமா ஒரு சோமாலியா இல்ல உகாண்டா காரராகத்தான் இருப்பாரு. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா இருக்க வாய்ப்பே இல்லை.
கணோஜுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது ....போவியா
இந்தியாவில் எப்போதும் மக்கள் பிரச்சனை பற்றி பேசி போராடும் ஒரே தலைவர் ஸ்டாலின் , ஆகவே ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு எட்டு திக்கும் வெல்லட்டும்
ஆமா அப்படி என்ன ஸ்டாலின் மக்கள் பிரச்சனைக்கு போராடினாரு?அதுக்கு இவரு அப்பா கருணாநிதியாச்சும் பீச்சுல மூணு மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி கின்னஸ் சாதனை படைச்சாரு.
ரேஷன் அரிசியை லாரிகளில் ஏற்றுவதால் 1900 கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்படுகின்றது என்கிற இந்த திருட்டு திராவிட மாடல் ஊழல் அரசுக்கு எதற்க்காக மத்தியில் ஆளும் அரசு ஊக்கதொகையை கொடுக்க வேண்டுமோ தெரியல. அதே சமயம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்ள்முதல் செய்ய திமுக புரோக்கர்களுக்கு கையூட்டு கொடுத்தால் மட்டுமே அங்கே லாரி வருமாம். அப்படி கையூட்டு கொடுத்தும் கூட நெல் மூட்டைகள் மழையிலும் நனைந்து நெல்மூட்டைகள் நாசமாகி முளைவிட்டு வீணாக போகிறதே என்று எவ்வ்வளவோ எடுத்து சொல்லியும் கூட இந்த ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை தஞ்சை மக்கள் நன்கறிவார்கள். அடடே இவர்தானே தஞ்சையில் உலகமே போற்றிய மீத்தேன் வாயு எடுக்க தஞ்சையை பாலைவனமாக்க கெய்யெழுத்திட்டு அதனை பெருமையாக விளம்பரம் செய்தவரு .. இப்படி கூட ஒருத்தர் மக்களின் மறதியை தனக்கு சாதகமாக பேசி மடைமாற்றுவார்? இன்றைய மக்களிடையே உள்ள கோஷம் பய் பய் ஸ்டாலின் என்பதுதான். போய்விடுங்க ஸ்டாலின் போதும் உங்களின் ஆட்சியின் லட்சணம்
உன்னுடைய வயதுக்கும் வகிக்கிற பதவிக்கும் பொய் சொல்வது அழகில்லை திராவிட மாடல் தலிவரே . உன்னுடைய தரத்தை குறைத்து கொள்ளாதீர்
நல்லா உருட்டுமேலும்
-
தேன் இறக்குமதி விலை டிச., 31 வரை நீட்டித்தது அரசு
-
அமெரிக்க 'மேஜிக்' ஜவுளி கண்காட்சி ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க அரசு மானியம்
-
'மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல்': காங்., தலைவர் கார்கே குற்றச்சாட்டு
-
பேக்கேஜிங் பொருட்கள் விலை உயர்வு ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில் பாதிப்பு
-
முருங்கை ஏற்றுமதி 40% சரிவு உள்நாட்டில் விற்க முயற்சி
-
காசோலைகள் பணமின்றி திரும்பினால் இயக்குநர்களை தண்டிக்க முடியாது 'செக் பவுன்ஸ்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு