நலத் திட்டங்களைக் கொண்டு வருவேன்: தி.மு.க., வேட்பாளர் வசந்தவேல் உறுதி

உளுந்துார்பேட்டை: 'மக்களுக்கான திட்டங்களை கொண்டு வர வாய்ப்பு அளியுங்கள்' என உளுந்துார்பேட்டை தொகுதி தி.மு.க.. வேட்பாளர் வசந்தவேல் பேசினார்.

மூலசமுத்திரம், பு.கொணலவாடி, ஏமம், வெள்ளையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு அவர் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சியில்தான் உளுந்துார்பேட்டைக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உட்பட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மீண்டும் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்படும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றி தரப்படும். இந்த தொகுதியில் இன்னும் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்படும். அதற்கான வாய்ப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் செல்லையா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலா, ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement