ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்
நிங்போ: ஆசிய பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி முன்னேறினார்.
சீனாவின் நிங்போ நகரில், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் 'நம்பர்-25' இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உலகின் 'நம்பர்-4' இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி மோதினர். முதல் செட்டை 23-21 எனக் கைப்பற்றிய ஆயுஷ், இரண்டாவது செட்டை 21-17 என வென்றார்.
மொத்தம் 54 நிமிடம் நீடித்த போட்டியில் ஆயுஷ் ஷெட்டி 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் 3 ஆண்டுகளுக்கு பின், இத்தொடரில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார் ஆயுஷ். கடைசியாக 2023ல் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றிருந்தது. தவிர, 8 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரின் ஒற்றையரில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரரானார் ஆயுஷ். கடைசியாக 2018ல் அரையிறுதி வரை சென்ற பிரனாய், வெண்கலம் வென்றிருந்தார்.
மேலும்
-
லெபனானுடன் பேச்சு நடத்த இஸ்ரேல் சம்மதம்; அமெரிக்கா - ஈரான் தலைவர்கள் இன்று சந்திப்பு
-
அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு: ரஜினி ரசிகர் மன்றம் அறிவிப்பு
-
உதயநிதி ஒரு நாளும் முதல்வராக முடியாது
-
மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய ராமதாஸ் வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
-
பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி மருத்துவமனையில் 'அட்மிட்'
-
கூட்டம் வரலாம் ஓட்டாக மாறாது