அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு: ரஜினி ரசிகர் மன்றம் அறிவிப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தோர், வரும் சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.,வை ஆதரிக்க முடிவெடுத்து உள்ளனர்.

நேற்று இது தொடர்பாக, சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற துணை செயலர் கனகராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்குப் பின், கனகராஜ் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரிடம், பனமரத்துப்பட்டி ஏரியை துார்வாரி நீர் நிரப்பி சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தோம்; செய்து கொடுப் பதாக சொல்லி இருக்கிறார்.

எளிமையான நபராக இருக்கும் அவரை, எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.

அதனால், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறச் செய்வோம். இது குறித்து, தலைவர் ரஜினிக்கு , வாட்ஸாப்பில் தகவல் அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement