கட்சி கொடி வைப்பதில் பாரபட்சம்: வி.சி., கட்சியினர் திடீர் போராட்டம்
பொன்னேரி: கட்சி கொடி வைப்பதில் பாரபட்சமாக இருப்பதாக கூறி, வி.சி., கட்சியைச் சேர்ந்த சிலர், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி சட்டசபை தொகுதிக்கு, தி.மு.க., கூட்டணி சார்பில் காங்., கட்சி போட்டியிடுகிறது. நேற்று கோளூர், திருப்பாலைவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும், கூட்டணி கட்சிகளின் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திருப்பாலைவனம் கிராமத்தில், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளின் கொடிகம்பங்கள் இருந்தன. ஆனால், வி.சி.,யின் கொடிகம்பங்கள் இல்லை எனக்கூறி, அக்கட்சியினர் சிலர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி - பழவேற்காடு சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் கொடிகம்பங்கள் வைக்கப்பட்டு, வி.சி., கட்சி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக கூறினர்.
தகவலறிந்து வந்த திருப்பாலைவனம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்
-
தேன் இறக்குமதி விலை டிச., 31 வரை நீட்டித்தது அரசு
-
அமெரிக்க 'மேஜிக்' ஜவுளி கண்காட்சி ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க அரசு மானியம்
-
'மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல்': காங்., தலைவர் கார்கே குற்றச்சாட்டு
-
பேக்கேஜிங் பொருட்கள் விலை உயர்வு ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில் பாதிப்பு
-
முருங்கை ஏற்றுமதி 40% சரிவு உள்நாட்டில் விற்க முயற்சி
-
காசோலைகள் பணமின்றி திரும்பினால் இயக்குநர்களை தண்டிக்க முடியாது 'செக் பவுன்ஸ்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு