அரக்கோணம் தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: ரயில் பணிமனை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் ஏழு மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை:

★ சென்ட்ரல் - அரக்கோணம் இரவு 10:55 மணி ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது

★ சென்ட்ரல் - திருவள்ளூர் இரவு 11:15 மணி ரயில் இன்று திருநின்றவூர் வரை இயக்கப்படும்

நாளை ஒரு பகுதி ரத்து

★ சென்ட்ரல் - திருவள்ளூர் அதிகாலை 4:30, 5:00 மணி ரயில்கள் நாளை திருநின்றவூர் வரை இயக்கப்படும்

★ திருவள்ளூர் - சென்ட்ரல் அதிகாலை 3:50 மணி ரயில் திருநின்றவூரில் இருந்து இயக்கப்படும்

★ திருவள்ளூர் - பொன்னேரி அதிகாலை 5:20 மணி ரயில், திருவள்ளூர் - சென்ட்ரல் காலை 5:55 மணி ரயில்கள் திருநின்றவூரில் இருந்து இயக்கப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement