கடலுார் காங்., வேட்பாளர் வீதி வீதியாக பிரசாரம் 

கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்., சார்பில் போட்டியிடும் சந்திரசேகர் நேற்று செம்மண்டலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்பகுதி, ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பிரசாரத்தை துவக்கினார்.

திறந்த வேனில் நின்றபடி ஓட்டுக்கேட்டு வீதி வீதிவழியாக சென்றார். கடலுார் மாநகரில், 1முதல் 11 வது வார்டு வரை தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, 'தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் மகளிருக்கு ரூ.2 ஆயிரம், 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன், சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்களுக்கு பிணை இல்லாமல், 5 லட்சம் ரூபாய் மானியத்துடன் வங்கி கடன், கட்டணமில்லா விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

கடலுார் மாநகராட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படும். அதனால், கை சின்னத்திற்கு ஆதரவு தாருங்கள்,' என கேட்டனர். அப்போது காங்., வேட்பாளரை, ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் எம்.எல்,ஏ., ஐயப்பன், புகழேந்தி, காங்., மாவட்டத்தலைவர் ரங்கமணி, துணை மேயர் தாமரைச்செல்வன், இந்திய கம்யூ., மாதவன், மா.கம்யூ., குளோப், கீதா குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement