அ. தி.மு.க., வேட்பாளர் பள்ளி வாசலில் ஓட்டு சேகரிப்பு

மந்தாரக்குப்பம்: புவனகிரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கெங்கைகொண்டான் பேரூராட்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன் பிரசாரம் செய்தார்.

தொடர்ந்து மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளி வாசலில் ஓட்டு சேகரித்தார். அப்போது 'சிறுபான்மை பிரிவு மக்களுக்கு அ.தி.மு.க., என்றும் உறுதுணையாக இருக்கும்; இஸ்லாமிய மக்களுக்கு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்; என தெரிவித்தார். பள்ளி வாசல் நிர்வாகிகள் அவருக்கு புனித நுாலான திருக்குர்ஆனை வழங்கினர்.

பள்ளி வாசல் நிர்வாகிகள் மதார்ஷா, முஹம்மதுமீரான்,அப்துல்சமது,செய்யதுமுஹம்மது மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், நகர செயலாளர் மனோகரன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர்கள் அருளழகன், பாலமுருகன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் அன்வர்தீன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமது நாசர், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பிரியதர்ஷன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சிவசுப்பரமணியம், அவை தலைவர் சங்கர், பா.ஜ.,புவனகிரி தொகுதி பொறுப்பாளர் முருகன், பா.ம.க., நகர செயலாளர் வேல்முருகன், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் அப்துல்சலாம், ேஷக்மீரான், முகமதுசித்திக், அஜீஸ்தாரிக், அஸ்கர்தீன், காசீம், சாதிக், யூசப்,ஜெயயலாணி,சேட் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement